உலகில் ஆக அதிகமாக 4,825 பேரைப் பலி கொடுத்த இத்தாலி

உலகில் ஆக அதிகமாக 4,825 பேரைப் பலி கொடுத்த இத்தாலி

2 mins read
68b65919-ffbd-4504-a84f-723c23e53b93
கிருமித் தொற்றுக்கு எதிரான போரில் இத்தாலிய சுகாதாரப் பணியாளர்கள் சோர்ந்து போயுள்ள நிலையில், லம்பர்டியின் தென்கிழக்கு மிலனில் கிரெமோனா மருத்துவமனையில் உள்ள செவிலியர்கள் முகக்கவசம் அணிந்தபடி தங்களை அரவணைத்துக் கொண்டனர். படம்: ஏஎஃப்பி -

லம்­பார்டி: இத்­தா­லி­யில் கொவிட்-19 கிரு­மித் தொற்­றால் பலி­யா­ன­வர்­க­ளின் எண்­ணிக்கை ஒவ்­வோர் நாளும் புதிய உச்­சத்தை எட்­டும் நிலை­யில், நேற்று முன் தினம் ஆக அதி­க­மாக சுமார் 793 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

இத­னால் பலி­யா­ன­வர்­க­ளின் மொத்த எண்­ணிக்கை கிட்­ட­தட்ட ஐயா­யி­ரத்தை எட்­டி­யது. இது உல­க­ள­வில் ஏற்­பட்ட உயி­ரி­ழப்­பில் 38.3 விழுக்­கா­டா­கும்.

கிரு­மித் தொற்­றால் ஏற்­பட்ட உயி­ரி­ழப்­பு­களில் கடந்த வியா­ழக்­கி­ழமை சீனாவை மிஞ்­சி­யது இத்­தாலி.

இத்­தாலி முழு­வ­தும் மொத்­தம் 53,578 பேர் கிரு­மித் தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். சுமார் 6,000 பேர் குண­ம­டைந்து வீடு திரும்­பி­யுள்­ள­னர்.

இத்­தா­லி­யில் மிக மோச­மாக பாதிக்­கப்­பட்­டுள்ள வடக்கு லம்­பர்டி பகு­தி­யில் மட்­டும் 3,095 பேர் மாண்­ட­னர். 25,515 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

கடந்த எட்­டாம் தேதி முதல் லம்­பர்டி முடக்­கப்­பட்­டி­ருந்­தா­லும் அங்கு கிரு­மிப் பர­வலை கட்­டுப்­பாட்­டிற்­குள் கொண்டு வர முடி­ய­வில்லை.

இதை­ய­டுத்து, இரண்­டாம் உல­கப் போருக்­குப் பின்­னர் இது நாட்­டின் மிகக் கடி­ன­மான நெருக்­கடி நிலை என்று கிரு­மிப் பர­வலைக் கூறிய இத்­தா­லி பிர­த­மர் கியூ­செப் கோண்டே மேலும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை அறி­வித்­தார்.

அதன்­படி கிரு­மிப் பர­வ­லில் இருந்து உயிர்­க­ளைப் பாது­காக்­கும் வகை­யில், இத்­தா­லி­யில் தொழிற்­சா­லை­களும் முற்­றி­லும் அத்­தி­யா­வ­சி­ய­மற்ற அனைத்து உற்­பத்­தி­களும் ஏப்­ரல் 3ஆம் தேதி வரை நிறுத்­தப்­படும்.

இது­பற்றி பேசிய பிர­த­மர், "உற்­பத்­தியை குறைத்­துள்­ளோமே தவிர முற்­றி­லும் நிறுத்­த­வில்லை," என்­றார்.

லம்­பர்­டி பகுதியிலும் கடு­மை­யான கட்­டுப்­பா­டு­களை அறி­வித்­துள்­ளார் அதி­பர் அட்­டி­லியோ ஃபோண்டனா.

அதை­ய­டுத்து அனைத்து திறந்­த­வெளி வார சந்­தை­களும் நிறுத்­தப்­பட்­டுள்­ளன. மருத்­து­வ­ம­னை­கள், சாலை­கள் மற்­றும் ரயில்வே உள்­ளிட்­ட­வற்­றைத் தவிர கட்­ட­டங்­களில் நடை­பெ­றும் அனைத்து பணி­களும் நிறுத்­தப்­படும்.

வங்­கி­கள், அஞ்­ச­ல­கங்­கள் வழக்­கம் போல் செயல்­படும் என்று கூறப்­பட்­டுள்­ளது. அது­போல் பொது போக்­கு­வ­ரத்­தும் தொடர்ந்து இயங்­கும்.