'கிருமித்தொற்று மீண்டும் தலையெடுக்கக்கூடும்'

'கிருமித்தொற்று மீண்டும் தலையெடுக்கக்கூடும்'

1 mins read
edf7c715-6479-41d3-8297-083b78df35e1
கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க நாடு­கள் தங்­கள் சமூ­கத்தை வெறு­மனே முடக்­கு­வது போதாது என்­றும் அவை மீண்­டும் எழாமல் இருக்க பொது சுகா­தார நட­வ­டிக்­கை­கள் தேவை என்றும் உலக சுகா­தார அமைப்­பின் நிபு­ணர் மைக் ரயான் நேற்று தெரி­வித்­தார். கோப்புப்படம்: ராய்ட்டர்ஸ் -

லண்­டன்: கிரு­மிப் பர­வ­லைத் தடுக்க நாடு­கள் தங்­கள் சமூ­கத்தை வெறு­மனே முடக்­கு­வது போதாது என்­றும் அவை மீண்­டும் எழாமல் இருக்க பொது சுகா­தார நட­வ­டிக்­கை­கள் தேவை என்றும் உலக சுகா­தார அமைப்­பின் நிபு­ணர் மைக் ரயான் நேற்று தெரி­வித்­தார்.

"நாம் உண்­மை­யில் கவ­னம் செலுத்த வேண்­டி­யது என்­ன­வென்­றால், நோய்­வாய்ப்­பட்­ட­வர்­க­ளைக் கண்­டு­பி­டிப்­பது, கிரு­மித் தொற்று உள்­ள­வர்­களைத் தனி­மைப்­ப­டுத்­து­வது, அவர்­க­ளின் தொடர்­பு­க­ளைக் கண்­ட­றிந்து அவர்­க­ளைத் தனி­மைப்­ப­டுத்­து­வது," என்று மைக் ரயான் பிபி­சி­யின் ஆண்ட்ரூ மார் நிகழ்ச்­சி­யில் அளித்த பேட்­டி­யில் கூறி­னார்.

"வலு­வான பொது சுகா­தார நட­வ­டிக்­கை­களை நாம் இப்­போது முன்­னெ­டுக்­க­வில்லை என்­றால், முடக்க கட்­டுப்­பா­டு­கள் நீக்­கப்­படும்போது, கிரு­மித் தொற்று மீண்­டும் தலை­யெ­டுக்க வாய்ப்­புள்­ளது," என்­றார்.

சாத்­தி­ய­மான ஒவ்­வொரு சந்­தேக நப­ரை­யும் சோதிக்க கடு­மை­யான நட­வ­டிக்­கை­க­ளு­டன் கட்­டுப்­பா­டு­களை இணைத்த சீனா, சிங்­கப்­பூர் மற்­றும் தென் கொரி­யா­வின் எடுத்­துக்­காட்­டு­கள் ஐரோப்­பா­விற்கு முன் மாதி­ரியை வழங்­கி­யுள்­ள­தாக ரயான் குறிப்­பிட்­டார். இந்த நட­வ­டிக்­கை­கள் தொற்­று­நோ­யின் மைய­மாக ஆசியா மாறு­வ­தைத் தடுத்த­தா­க­வும் அவர் சொன்­னார்.