கொவிட்-19: மலேசியாவில் உயிரிழப்பு 11 ஆனது

கொவிட்-19: மலேசியாவில் உயிரிழப்பு 11 ஆனது

1 mins read
5a866d52-f46a-4adf-837a-d97c82785368
கோலாலம்பூர் மருத்துவமனையில் பாதுகாப்புக் கவசங்களுடன் மருத்துவப் பணியாளர்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவில் நேற்று (மார்ச் 22) உயிரிழந்த 70 வயது ஆடவர், கொரோனா கிருமித்தொற்றால் அங்கு உயிரிழந்த 11வது நபர்.

நேற்றிரவு 9.05 மணிக்கு UKM Tuanku Muhriz Canselor மருத்துவமனையில் அவர் உயிரிழந்தார்.

சென்ற மாதம் இந்தோனீசியாவுக்குச் சென்று வந்த அவருக்கு வேறு உடல்நலப் பிரச்சினைகளும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

மருத்துவமனையில் கடந்த 19ஆம் தேதி அனுமதிக்கப்படுவதற்கு ஒரு வாரத்துக்கு முன்பே கிருமித்தொற்று அறிகுறிகள் அவருக்கு இருந்தன.

உடல் நிலை மோசமடைந்து நேற்றிரவு அவர் உயிரிழந்ததாக சுகாதாரத் துறை நிர்வாக இயக்குநர் டாக்டர் நூர் ஹி‌‌‌ஷாம் அப்துல்லா இதனைத் தமது ஃபேஸ்புக் பதிவில் இன்று தெரிவித்தார்.

நேற்றைய நிலவரப்படி மலேசியாவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,306. நேற்று புதிதாக 123 பேர் பாதிக்கப்பட்டனர்.139 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.

#மலேசியா #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்