மலேசியாவில் ஒரே நாளில் 212 பேருக்கு தொற்று; உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆனது

மலேசியாவில் ஒரே நாளில் 212 பேருக்கு தொற்று; உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆனது

1 mins read
ac808910-baa3-4422-b664-8c9c85b36feb
கொவிட்-19 அச்சத்தால் மலேசியாவில் நடமாட்டக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அங்கு வெறிச்சோடிக் கிடக்கும் ரயில். படம்: ராய்ட்டர்ஸ் -

மலேசியாவில் இன்று (மார்ச் 23) ஒரே நாளில் 212 பேருக்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதனையடுத்து அங்கு தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1,518 ஆகியுள்ளது.

கிருமித்தொற்றால் இதுவரை அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது.

இதுவரை பதிவான சம்பவங்களில் ஒரே நாளில் ஆக அதிகமாகப் பதிவானது இன்றுதான்.

புதிதாகப் பதிவான 212 சம்பவங்களில் 123 பேர் கோலாலம்பூருக்கு அருகில் உள்ள ஶ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற டப்லிக் சமயக் கூட்டத்தில் பங்கேற்றவகளுடன் தொடர்புடைய சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டவர்கள் என்று மலேசிய சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.

அந்த சமயக் கூட்டத்துடன் தொடர்புடைய சம்பவங்களின் எண்ணிக்கை 970ஆக உயர்ந்துள்ளது.

அந்த சமயக் கூட்டத்தில் பங்கேற்ற 70 வயது ஆடவர் கிருமித்தொற்றால் உயிரிழந்த 12வது நபர். அவர் குளுவாங்கில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

அந்த சமயக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவருடன் தொடர்பில் இருந்த 49வது ஆடவர், கிருமித்தொற்றால் உயிரிழந்த 13வது நபர். அவர் மிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அதே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 51 வயது மலேசிய மாது கிருமித்தொற்றால் உயிரிழந்த 14வது நபர். அந்த சமயக் கூட்டத்தில் பங்கேற்ற ஒருவருடன் தொடர்பில் இருந்தவர் இவர்.

#மலேசியா #கொவிட்-19 #தமிழ்முரசு

குறிப்புச் சொற்கள்