நியூயார்க்கில் அதிகரிக்கும் கிருமித்தொற்று சம்பவங்கள்

நியூயார்க்கில் அதிகரிக்கும் கிருமித்தொற்று சம்பவங்கள்

2 mins read
3539a222-13b0-4814-a9ea-7627adc53f51
நியூ­யார்க் மாநி­லத்­தில் 15,000க்கும் அதி­க­மா­னோ­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. கிருமியைக் கட்டுப்படுத்துவதற்கு அமைக்கப்பட்ட சிறப்புக் குழுவினரிடம் உரையாற்றுகிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். படம்: நியூயார்க் டைமஸ் -

நியூ­யார்க்: கொரோனா கிரு­மித்­தொற்று கண்­ட­றி­யப்­பட்ட மூன்றே வாரங்­களில் அமெ­ரிக்­கா­வின் நியூ­யார்க் மாநி­லம் நேற்று முன்­தி­னம் புதிய மைல்­கல்லை எட்­டி­யது. உல­க­ள­வில் உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களில் ஐந்து விழுக்­காடு நியூ­யார்க்­கில்­தான் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. கிருமி பர­வ­லைக் கட்­டுப்­ப­டுத்த மேலும் கடு­மை­யான நட­வ­டிக்­கை­களை எடுக்­கும் முயற்­சி­யில் அதி­கா­ரி­கள் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். அதன் ஒரு பகு­தி­யாக, பொது இடங்­களில் மக்­கள் கூடு­வ­தைக் கட்­டுப்­ப­டுத்த நியூ­யார்க் ஆளு­நர் ஆன்ட்ரூ குவோமோ அதி­கா­ரி­களுக்கு உத்­த­ர­விட்­டுள்­ளார். சில வீதி­கள் மூடப்­ப­டு­மா­றும் அவர் பரிந்­து­ரைத்­துள்­ளார்.

கிருமி பர­வல் மேலும் அதி­க­ரிக்­கக்­கூ­டும் என்­ப­தால் நியூ­யார்க் நக­ரின் மூன்று இடங்­களில் தற்­கா­லிக மருத்­து­வ­ம­னை­கள் அமைக்­கப்­படும் என அவர் அறி­வித்­தார்.

நியூ­யார்க் முழு­வ­தும் உள்ள மருத்­து­வ­ம­னை­களில் சிகிச்சை பெற்று வரும் நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை கணி­ச­மாக அதி­க­ரித்­துள்­ளது. இதன் கார­ண­மாக, சிகிச்­சைக்கு தேவை­யான முகக்­க­வ­சங்­க­ளுக்­கும் 'வென்­டி­லேட்­டர்' சாத­னங்­க­ளுக்­கும் தட்­டுப்­பாடு நில­வக்­கூ­டும் என எச்­ச­ரிக்­கப்­ப­டு­கிறது.

நியூ­யார்க் மாநி­லத்­தில் 15,000க்கும் அதி­க­மா­னோ­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது உறு­தி­செய்­யப்­பட்­டுள்­ளது. அவர்­களில் பெரும்­பா­லா­னோர் நியூ­யார்க் நக­ரில் வசிப்­ப­வர்­கள். மேலும் அதி­க­மா­னோ­ரி­டம் கொரோ­னா­வுக்­கான மருத்­து­வப் பரி­சோ­தனை செய்­யப்­பட்­டதை அடுத்து பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது.

நியூ­யார்க் மாநி­லத்­தில் எட்டு பேரில் ஒரு­வர் கொரோனா பாதிப்­புக்­காக மருத்­து­வ­ம­னை­யில் சிகிச்சை பெற்று வரு­கி­ன்றனர். நேற்று முன்­தி­னம் நில­வ­ரப்­படி, கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டி­ருந்த 114 பேர் உயி­ரி­ழந்­த­தாக மாநில அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர். அமெ­ரிக்­கா­வில் பதி­வா­கி­யுள்ள மரண எண்­ணிக்­கை­யில் அது கிட்­டத்­தட்ட பாதி அள­வா­கும். அமெ­ரிக்­கா­வில் கொரோ­னா­வால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­வர்­க­ளின் எண்­ணிக்கை 31,000ஐ கடந்­து­விட்­டது. கிரு­மித்­தொற்­றால் 390 பேர் உயி­ரி­ழந்­த­னர்.

US President Donald Trump speaking during a coronavirus task force news conference at the White House on Sunday. Nearly one-third of Americans are in various phases of virtual lockdown, including in the three biggest cities of New York, Los Angeles and Chicago, but Mr Trump has so far resisted calls for a uniform shutdown. PHOTO: NYTIMES