பிரான்சில் மேலும் 112 பேர் மரணம்

பிரான்சில் மேலும் 112 பேர் மரணம்

1 mins read
1b679838-105e-406e-a3d0-323622c701b8
பிரான்­சில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் நேற்று முன்­தி­னம் மேலும் 112 பேர் உயி­ரி­ழந்­த­னர். அவர்­க­ளை­யும் சேர்த்து, அந்­நாட்­டில் மாண்­டோர் எண்­ணிக்கை 674ஆக உயர்ந்­தது. கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­த­வர்­களில் மருத்­து­வர் ஒரு­வ­ரும் அடங்­கு­வார். படம்: ஏஎப்பி -

பாரிஸ்: பிரான்­சில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் நேற்று முன்­தி­னம் மேலும் 112 பேர் உயி­ரி­ழந்­த­னர். அவர்­க­ளை­யும் சேர்த்து, அந்­நாட்­டில் மாண்­டோர் எண்­ணிக்கை 674ஆக உயர்ந்­தது. கிரு­மித்­தொற்­றால் உயி­ரி­ழந்­த­வர்­களில் மருத்­து­வர் ஒரு­வ­ரும் அடங்­கு­வார்.

இந்­நி­லை­யில், கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக அய­ராது போரா­டி­வ­ரும் முதல்­நிலை சுகா­தா­ரப் பரா­ம­ரிப்பு ஊழி­யர்­க­ளுக்கு பிரெஞ்சு சுகா­தார அமைச்­சர் ஒலி­வியே வேரன் புக­ழா­ரம் சூட்­டி­னார்.

பிரான்­சில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டோ­ரின் எண்­ணிக்கை ஒரே நாளில் 11 விழுக்­காடு அதி­க­ரித்து 16,000ஐ தாண்­டி­விட்­ட­தாக அவர் கூறி­னார்.

பிரான்ஸ் முடக்­கப்­பட்டு கிட்­டத்­தட்ட ஒரு வார கால­மா­கி­விட்­டது. மருத்­து­வ­ரைப் பார்க்­க­வும் அத்­தி­யா­வ­சி­யப் பொருட்களை வாங்­க­வும் மட்­டுமே மக்­கள் வீட்­டை­விட்டு வெளி­யேற அனு­ம­திக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

புதிய கட்­டுப்­பா­டு­கள் பலன் தரும்­வரை பொறுமை காக்­கும்­படி அதி­கா­ரி­கள் மக்­க­ளைக் கேட்­டு­க்கொண்­டு உள்­ள­னர்.