கிருமித்தொற்று மின்னல் வேகத்தில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

கிருமித்தொற்று மின்னல் வேகத்தில் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

2 mins read
125ad578-20d8-47ea-a1ef-bc444e1bf525
ஐக்கிய நாடுகள் சபை, உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் கோரிக்கைகளை ஏற்று  US$500,000 (S$730,000) தொகையை கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிரான போருக்காக நன்கொடையாக வழங்குகிறது சிங்கப்பூர் அரசாங்கம். படம்: ராய்ட்டர்ஸ் -

ஜெனீவா: கொவிட்-19 எனப்­படும் கொரோனா கிரு­மித்­தொற்று மின்­னல் வேகத்­தில் பரவி வரு­வ­தாக உலக சுகா­தார நிறு­வ­னம் நேற்று எச்­ச­ரிக்கை விடுத்­தது. இருப்­பி­னும், கிருமி பர­வு­வ­தைக் குறைப்­ப­தற்­கான சாத்­தி­யக்­கூ­று­கள் இன்­னும் இருப்­ப­தாக அது கூறி­யது.

கொரோனா கிரு­மித்­தொற்­றால் மாண்­டோர் எண்­ணிக்கை 15,000ஐ கடந்­ததை அடுத்து, உலக சுகா­தார நிறு­வ­னம் இவற்­றைக் கூறி­யது. நேற்­றைய நில­வ­ரப்­படி உல­க­ளா­விய நிலை­யில் 341,000க்கும் மேற்­பட்­டோர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். கடந்த டிசம்­பர் மாதம் சீனா­வில் கிரு­மித்­தொற்று தொடங்கி 67 நாட்­களில் உல­கெங்­கும் 100,000 பேருக்கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டது. ஆனால் அடுத்த 11 நாட்­க­ளி­லேயே மேலும் 100,000 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். அதை­ய­டுத்து அடுத்த நான்கு நாட்­களில் மேலும் 100,000 பேர் நோய்­வாய்ப்­பட்­ட­னர்.

பதிவு செய்­யப்­பட்­டுள்ள நோயா­ளி­க­ளின் எண்­ணிக்கை உண்­மை­யான எண்­ணிக்­கை­யின் ஒரு சிறிய பகு­தி­யாக இருக்­க­லாம் என்று

நம்­பப்­ப­டு­கிறது.

பல நாடு­களில் மிக மோச­மான வகை­யில் உடல்­ந­லம் பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­களில் அனு­ம­திக்­கப்­படும் நிலை ஏற்­ப­டு­வோ­ருக்கு மட்­டும் மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்­தப்­ப­டு­கிறது.

"நாம் அனை­வ­ரும் ஒன்­றும் செய்ய முடி­யாத பார்­வை­யா­ளர்­கள் அல்ல. கொரோனா கிரு­மிப் பர­வ­லின் வேகத்தை நாம் குறைக்­க­லாம்," என்று உலக சுகா­தார நிறு­வ­னத்­தின் தலை­வர் தேட்­ரோஸ் அத­னோம் கேப்­ரி­யே­சுஸ் தெரி­வித்­தார்.

கொரோனா கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரைக் காற்­பந்து ஆட்­டத்­து­டன் அவர் ஒப்­பிட்­டார்.

"தற்­காப்­பில் மட்­டும் ஈடு­பட்­டால் வெற்றி பெற முடி­யாது. வெற்றி பெற தாக்­கு­தல் நடத்த வேண்­டும். கிரு­மிக்கு எதி­ராக மூர்க்­கத்­த­ன­மா­க­வும் உத்­தி­பூர்­வ­மா­க­வும் செயல்­பட வேண்­டும் என்­றார் அவர்.

"கிருமித் தொற்று ஏற்பட்டு இருக்கக்கூடும் என சந்­தே­கம் ஏற்­பட்­டால் மருத்­து­வப் பரி­சோ­தனை நடத்த வேண்­டும். பாதிக்­கப்­பட்­டோ­ரைப் பார்த்­துக்­கொள்ள வேண்­டும், அவர்­க­ளு­டன் தொடர்­பில் இருந்­தோ­ரைத் தனி­மைப்­ப­டுத்த வேண்­டும்," என்றார் திரு கேப்ரியேசுஸ்.