ரியாத்: சவூதி அரேபியாவில் பொழுது சாய்ந்து விடியும் வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா கிருமித்தொற்றை எதிர்கொள்ள இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு உத்தரவை சவூதி மன்னர் சல்மான் பிறப்பித்ததும் சவூதி நேரப்படி மாலை 7 மணியிலிருந்து வீட்டைவிட்டு வெளியே வர வேண்டாம் என்று போலிஸ் கார்களில் சென்றவாறு அதிகாரிகள் ஒலிபெருக்கிகள் மூலம் அறிவிப்பு செய்து மக்களுக்கு ஞாபகப்படுத்தினர். இந்த ஊரடங்கு 21 நாட்களுக்கு நடைமுறைப்படுத்தப்படும் என்று சவூதி அதிகாரிகள் தெரிவித்தனர். சவூதி அரேபியாவில் 562 பேருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் இதுவே ஆக அதிகம். கிருமித்தொற்று காரணமாக சவூதியில் இதுவரை மரணங்கள் ஏற்படவில்லை. ஊரடங்கு காரணமாக சவூதியில் பொழுது சாய்ந்ததும் சாலைகள் வெறிச்சோடி இருக்கின்றன.
சவூதி அரேபியாவில் விடியும் வரை ஊரடங்கு
1 mins read
சவூதி அரேபியாவில் 21 நாட்களுக்கு பொழுது சாய்ந்து விடியும் வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. படம்: ஏஎப்பி -

