மலேசியா: மொத்த விற்பனைச் சந்தையில் 10 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிருமித்தொற்று அறிகுறிகள்

மலேசியா: மொத்த விற்பனைச் சந்தையில் 10 வெளிநாட்டு ஊழியர்களுக்கு கிருமித்தொற்று அறிகுறிகள்

1 mins read
57d09517-0c25-48f9-9e4a-51c423fba3f8
400 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கு மட்டும் கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்ன. படம்: தி ஸ்டார் -

செலயாங் மொத்த விற்பனை சந்தையில் 10 வெளிநாட்டு ஊழியர்கள் தங்களை 14 சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளனர்.

அவர்கள் கடந்த மாதம் 28ஆம் தேதி முதல் மார்ச் 2ஆம் தேதி வரை ஸ்ரீ பெட்டாலிங் பள்ளிவாசலில் நடைபெற்ற தப்லிக் நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள்.

கோலாலம்பூர் சிட்டி ஹால் (DBKL), சுகாதார அமைச்சு ஆகிய இரண்டும் இணைந்து இரண்டு மணி நேரம் மேற்கொண்ட நடவடிக்கையில் அவர்கள் அடையாளம் காணப்பட்டனர்.

நேற்றிரவு 10 மணி முதல் செயல்பட்டுக்கொண்டிருந்த கடைகளை அடைக்க அவர்கள் முற்பட்டுக்கொண்டிருந்ததாக DBKL நகர திட்டமிடல் துறையின் இயக்குநர் கைருல் அஸ்மிர் அகமது கூறினார்.

"நாங்கள் அங்கு சென்றபோது, அவர்களை நாங்கள் பிடிக்கச் சென்றதாக எண்ணி சில ஊழியர்கள் அங்கிருந்து தப்பிவிட முயன்றனர். ஆனால், நாங்கள் கொவிட்-19 பரிசோதனை செய்யத்தான் சென்றோம்," என்றார் அவர்.

"400 வெளிநாட்டு ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 10 பேருக்கு மட்டும் கிருமித்தொற்று அறிகுறிகள் தென்பட்டன. அவர்களுக்கு கூடுதல் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும்," என்றார் அவர். அந்த ஊழியர்களில் பெரும்பாலானோர் மியன்மார், பங்ளாதேஷ், இந்தோனீசியா நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்பட்டது.

மொத்த விற்பனைச் சந்தையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அடிக்கடி சுகாதாரப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறிய திரு கைருல், அவர்களைக் கண்காணிக்க டிரோன்கள் பயன்படுத்தப்படும் என்றார்.

#மலேசியா #செலாயாங் #வெளிநாட்டு ஊழியர்கள்

குறிப்புச் சொற்கள்