ஆஸ்திரேலியாவில் திருமண நிகழ்ச்சியில் ஐவர் மட்டுமே பங்கேற்க அனுமதி

சிட்னி: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கொரோனா கிருமி பர­வல் கட்­டுக்­க­டங்­கா­மல் இருப்­ப­தால் புதிய கட்­டுப்­பா­டு­கள் அறி­விக்­கப்­பட்­டுள்­ளன. பிர­த­மர் ஸ்காட் மோரி­சன், அவ­சி­ய­மற்ற வர்த்­த­கங்­களை மூட உத்தரவிட்டுள்ளார்.

திரு­மண நிகழ்ச்­சி­யில் கலந்­து­கொள்­வோ­ரின் எண்­ணிக்­கை­யும் 5ஆக குறைக்­கப்­பட்­டுள்­ளது.

திரு­ம­ணம் செய்­து­கொள்­ளும் தம்­பதி, திரு­ம­ணத்தை நடத்தி வைப்­ப­வர். இரு சாட்­சி­யா­ளர்­கள் என ஐவர் மட்­டுமே திரு­ம­ணத்­தில் கலந்­து­கொள்ள முடி­யும்.

இந்­தக் கட்­டுப்­பா­டு­கள் சிர­ம­மாக இருந்­தா­லும் மக்­கள் கடைப்­பி­டிப்­பது அவ­சி­யம் என்று பிர­த­மர் மோரி­சன் கேட்­டுக் கொண்­டார்.

இறு­திச் சடங்­குக்­கும் கட்­டுப்­பாடு விதிக்­கப்­பட்­டுள்­ளது.

அதில் அதி­க­பட்­ச­மாக பத்து பேர் மட்­டுமே கலந்­து­கொள்­ள­லாம் என்று தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் 2,250 பேருக்கு கிருமி தொற்­றி­யி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

நியூ­சி­லாந்­தில் புதிதாக 50 பேர்  கொரோனா கிருமியால் பாதிக்கப் பட்டுள்ளனர். ஒவ்­வொ­ரு­வ­ரும் தங்­களை சுய­மாக தனி­மைப்­ப­டுத்­திக் கொள்ள வேண்­டும் என்று உத்­த­ர­விட்ட பிற­கும் கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 205க்கு அதி­க­ரித்­துள்­ளது.

இத­னால் பிர­த­மர் ஜெஸின்டா ஆர்­டெர்ன், அவ­ச­ர­நி­லையை அறி­வித்­துள்­ளார். நேற்று நள்­ளி­ரவு முதல் அவ­ச­ர­நிலை அம­லுக்கு வந்­தது.

“நியூ­சி­லாந்­தில் நிலைமை மேலும் மோச­மா­வ­தற்கு முன்பு நாம் நட­வ­டிக்கை எடுத்­தாக வேண்­டும்,” என்று பிர­த­மர் ஜெஸின்டா வலி­யுறுத்­தி­னார்.

சமூ­கத்­தி­ன­ரி­டையே கிருமி பர­வு­வது உறு­தி­யா­ன­தால் நாடு முடக்­கப்­ப­டு­வ­தா­க­வும் அவர் நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

நேற்று வரை உச்­சக்­கட்­ட­மாக  50 புதிய கிருமி பாதிப்பு சம்பவங்கள் உறுதி செய்யப்பட்டன.

“என்ன செய்ய வேண்­டும், என்ன செய்­யக் கூடாது என்­ப­தில் சந்­தே­கம் ஏற்­பட்­டால் உட­ன­டி­யாக சிறிய விதி­மு­றையை பின்­பற்­றுங்­கள்: உங்­க­ளுக்கு கிரு­மித் தொற்­றி­யது போல செயல்­ப­டுங்­கள்,” என்­று பிரதமர் ஜெஸின்டா கூறி யுள்ளார்.

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!