'எச்சரிக்கை நிலை சிவப்புக்கு உயர்த்தப்படவிருப்பதாக வெளிவந்த தகவல்கள் வதந்தியே'

'எச்சரிக்கை நிலை சிவப்புக்கு உயர்த்தப்படவிருப்பதாக வெளிவந்த தகவல்கள் வதந்தியே'

1 mins read
c9c5b830-e244-43b9-bde1-80637a98417c
பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களை அமைச்சர் ஈஸ்வரன் கேட்டுக்கொண்டார். படம்: Gov.sg -

கொரோனா கிருமித்தொற்று காரணமாக சிங்கப்பூரில் எச்சரிக்கை நிலையை ஆரஞ்சு நிறத்திலிருந்து சிவப்புக்கு அரசாங்கம் மாற்றப்போவதாக பொய்ச் செய்திகள் வலம் வருவதாக தொடர்பு, தகவல் அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் இன்று (மார்ச் 26) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

"எச்சிரிக்கை நிலையை அரசாங்கம் சிவப்புக்கு மாற்றப்போவதாக வதந்திகள் வலம் வருவது குறித்து எங்களுக்குத் தெரியுவந்துள்ளது. சிங்கப்பூரில் முடக்கநிலை நடைமுறைப்படுத்தப்படும் என்ற பொய்ச் செய்திகள் வெளிவந்துள்ளன. இவையெல்லாம் முற்றிலும் பொய்யானவை. இத்தகைய பொய்ச் செய்திகள் பொறுப்பில்லாதவை, பொதுமக்களிடையே பீதியை ஏற்படுத்தக்கூடியவை," என்று அமைச்சர் ஈஸ்வரன் சாடினார்.

பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று பொதுமக்களைக் கேட்டுக்கொண்ட அமைச்சர், சுகாதார அமைச்சு, Gov.sg உள்ளிட்ட நம்பகமான இணையத்தளங்களில் தகவல்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறினார்.

குறிப்புச் சொற்கள்