சிவப்பு எச்சரிக்கை நிலை: வெளிவந்த தகவல் புரளியே

சிவப்பு எச்சரிக்கை நிலை: வெளிவந்த தகவல் புரளியே

1 mins read
8eb78349-b722-447e-8703-d9d4efdf9bf5
கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக எச்­ச­ரிக்கை நிலையை ஆரஞ்­சி­லி­ருந்து சிவப்­புக்கு அர­சாங்­கம் மாற்­றப்­போ­வ­தாக பொய்த் தகவல்கள் வலம் வரு­வ­தாக  தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார். படம்: எஸ்டி, கெல்வின் சிங் -

கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக எச்­ச­ரிக்கை நிலையை ஆரஞ்­சி­லி­ருந்து சிவப்­புக்கு அர­சாங்­கம் மாற்­றப்­போ­வ­தாக பொய்த் தகவல்கள் வலம் வரு­வ­தாக தொடர்பு, தக­வல் அமைச்­சர் எஸ்.ஈஸ்­வ­ரன் நேற்று நாடா­ளு­மன்­றத்­தில் தெரி­வித்­தார்.

"எச்­ச­ரிக்கை நிலையை அர­சாங்­கம் சிவப்­புக்கு மாற்­றப்­போ­வ­தாக புர­ளி­கள் வலம் வரு­வது எங்­க­ளுக்­குத் தெரி­யும்.

சிங்­கப்­பூ­ரில் முடக்­க­நிலை நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்ற பொய்ச் செய்­தி­கள் வெளி­வந்­துள்­ளன. இவை­யெல்­லாம் பொய்ச் செய்­தி­கள்.

இத்­த­கைய பொய்ச் செய்­தி­கள் பொறுப்­பில்­லா­தவை, பொது­மக்­க­ளி­டையே பீதியை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யவை," என்று அமைச்­சர் ஈஸ்­வ­ரன் சாடி­னார். பொய்ச் செய்திகளைப் பரப்ப வேண்டாம் என்று அமைச்சர் கேட்டுக்கொண்டார்.