சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு இப்போது மின்னஞ்சலில் உள்ளிருப்பு ஆணை

சிங்கப்பூர் வரும் பயணிகளுக்கு இப்போது மின்னஞ்சலில் உள்ளிருப்பு ஆணை

2 mins read
1f791b48-2eda-4cff-9be1-e5adb2d8428e
சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­கள் அனை­வ­ருக்­கும் வீட்­டி­லேயே இருக்க வேண்­டும் என்ற உத்­த­ரவு இப்­போது மின்­னஞ்­சல் மூலம் விடுக்­கப்­படும்.  படம்: எஸ்டி, கெவின் ஃபூ -

சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­கள் அனை­வ­ருக்­கும் வீட்­டி­லேயே இருக்க வேண்­டும் என்ற உத்­த­ரவு இப்­போது மின்­னஞ்­சல் மூலம் விடுக்­கப்­படும். இந்த ஏற்­பாடு இன்று காலை 9 மணி­யி­லி­ருந்து நடப்­புக்கு வரு­வ­தாக குடி­நு­ழைவு, சோத­னைச்­சா­வடி ஆணை­யம் புதன்­கி­ழமை அறி­வித்­தது.

உத்­த­ர­வுக்­குக் கீழ்ப்­ப­டிய தவ­றி­னால் எந்த அள­வுக்­குத் தண்­டனை இருக்­கும் என்­பது முன்­ன­தா­கவே அவர்­க­ளுக்­குத் தெரி­விக்­கப்­படும்.

சிங்­கப்­பூர் குடி­மக்­கள், நிரந்­த­ர­வா­சி­கள், நீண்­ட­கால வேலை அனு­மதி பெற்றுள்ள ஊழி­யர்­கள் உள்­ளிட்ட பய­ணி­கள் சிங்­கப்­பூ­ருக்கு வரும்­போது தங்­க­ளு­டைய சுகா­தார விவ­ரங்­களை குடி­நு­ழை­வுத் துறை­யி­டம் தெரி­யப்­ப­டுத்த வேண்­டும். பிறகு அவர்­க­ளுக்கு வீட்­டி­லேயே 14 நாட்­கள் தங்கி இருக்க வேண்­டும் என்ற உத்­த­ரவு மின்­னஞ்­சல் மூலம் அனுப்­பப்­படும்.

இந்த உத்­த­ரவை SG Arrival Card e-Service என்ற சேவை மூலம் பெற­லாம்.

பய­ணி­கள் சிங்­கப்­பூ­ரில் தரை­யி­றங்­கு­வ­தற்கு முன்­ன­தா­கவே படி­வங்­க­ளைப் பூர்த்தி செய்­ய­வும் இந்­தச் சேவை அனு­ம­திக்­கும்.

சிங்­கப்­பூ­ருக்கு வரும் பய­ணி­கள் அனை­வ­ரும் தரை­யி­றங்­கு­வ­தற்கு முன்­ன­தாக இணை­யம் வழி சுகா­தார தக­வல்­க­ளைத் தெரி­யப்­

ப­டுத்த வேண்­டும் என்று இந்­தத் துறை திங்­கட்­கி­ழமை அறி­வித்து இருந்­தது.

வெளி­நா­டு­களில் இருந்து கொரோனா கிரு­மி­கள் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழை­வ­தைத் தடுப்பதற்காக இடம்­பெ­றும் கூடு­தல் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு உள்­ளது.

பய­ணி­கள் செல்­லு­ப­டி­யா­கக் கூடிய மின்­னஞ்­சல் முக­வ­ரி­யை­யும் தொடர்பு எண்­ணை­யும் தங்­க­ளு­டைய சுகா­தா­ரப் படி­வத்­தில் இடம்­பெ­றச் செய்ய வேண்­டும் என்­பதை சுற்­றுப் பய­ணி­க­ளுக்கு இந்­தத் துறை நினை­வூட்டி இருக்­கிறது.

குறு­கிய கால பய­ணம் மேற்­கொண்டு வரு­வோர் சிங்­கப்­பூ­ருக்­குள் நுழைய முடி­யாது. சிங்­கப்­பூர் வழி­யா­க­வும் வேறு நாடு­க­ளுக்­குப் போக முடி­யாது என்­பது குறிப்­பி­டத்­தக்­கது.

விதி­மு­றை­க­ளுக்­குக் கீழ்­ப்ப­டி­யா­மல் நடந்­து­கொள்­வோ­ருக்­குத் தொற்­று­நோய்த் தடுப்­புச் சட்­டத்­தின் கீழ் தண்­டனை கிடைக்­கும் என்­பதை எடுத்­துச் சொல்லி திரும்­பத் திரும்ப அதி­கா­ரி­கள் எச்­ச­ரித்து வரு­கி­றார்­கள். வீட்­டி­லேயே இருக்க வேண்­டும் என்ற உத்­தரவை மீறு­வோ­ருக்கு $10,000 வரை அப­ரா­தம், ஆறு மாதம் வரை சிறை அல்­லது இரண்­டும் தண்­ட­னை­யாக கிடைக்­கக்­கூ­டும். இதர பல பாதிப்­பு­களும் அவர்­க­ளுக்கு ஏற்­படும்.