பிரிட்டனில் புதிய சாதனங்கள்: வீட்டிலேயே சோதிக்கலாம்

பிரிட்டனில் புதிய சாதனங்கள்: வீட்டிலேயே சோதிக்கலாம்

1 mins read
4c503842-d637-4135-98d9-bcd891d4b3ae
பிரிட்­ட­னில் யாருக்­கா­வது கொரோனா தொற்று இருக்­கி­றதா என்­பதை வீட்­டி­லேயே பரி­சோ­தித்­துத் தெரிந்­து­கொள்ள  உத­வும் சாத­னங்­கள் இன்­னும் ஓரிரு நாட்­களில் கிடைக்­கும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர். படம்: ராய்ட்டர்ஸ் -

லண்­டன்: பிரிட்­ட­னில் யாருக்­கா­வது கொரோனா தொற்று இருக்­கி­றதா என்­பதை வீட்­டி­லேயே பரி­சோ­தித்­துத் தெரிந்­து­கொள்ள உத­வும் சாத­னங்­கள் இன்­னும் ஓரிரு நாட்­களில் கிடைக்­கும் என்று அதி­கா­ரி­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

மொத்­தம் 3.5 மில்­லி­யன் சாத­னங்­கள் வாங்­கப்­ப­டு­வ­தாக சுகா­தார அதி­காரி ஒரு­வர் குறிப்­பிட்­டார். அந்­தச் சாத­னங்­கள் பொது­மக்­கள் பயன்­பாட்­டுக்கு ஒத்­து­வருமா, அவை பாது­காப்­பா­ன­வையா என்­பதை ஆக்ஸ்­போர்டு பல்­க­லைக்­க­ழ­கத்­தின் அறி­வி­யல் வல்­லு­நர்­கள் மதிப்­பி­டு­வார்­கள் என்­றும் அந்­தப் பணி முடிந்­த­தும் சாத­னங்­கள் விநி­யோ­கிக்­கப்­படும் என்­றும் பிரிட்­டனின் தொற்­று­நோய் நிலைய இயக்­கு­நர் பேரா­சி­ரி­யர் ஷரோன் பீக்­காக் குறிப்­பிட்­டார்.

அந்த இரத்­தச் சோத­னை சாத­னங்கள் Amazon.com வழி­யா­க­வும் பிர­பல மருந்­துக்­க­டை­கள் மூல­மா­க­வும் விற்­கப்­படும். இதனை வாங்கி வைத்­துக்கொண்டு மக்­கள் தங்­க­ளைத் தாங்­களே சோதித்துப் பார்த்­துக் கொள்­ள­லாம்.

ஒரு­வ­ரின் உட­லில் கொரோனா கிரு­மிக்கு எதி­ராக எந்த அள­வுக்கு எதிர்ப்­புச் சக்தி இருக்­கிறது என்­பதை அந்­தச் சாத­னம் துல்­லி­ய­மா­கக் காட்­டும் என்­றும் அந்­தப் பேரா­சி­ரி­யர் நாடா­ளு­மன்­றத்­தில் உறுப்­பி­னர்­ குழு­வி­டம் தெரி­யப்­ப­டுத்­தி­னார்.

பிரிட்­டன் மேலும் மில்­லி­யன் கணக்­கில் சாத­னங்­களை வாங்­கும் என்­றும் அவர் கூறினார்.

கொரோனா கிருமி பர­வ­லைத் தடுக்க போதிய அள­வுக்­கு பிரிட்டிஷ் அர­சாங்­கம் பரி­சோ­த­னை­களை முடுக்­கி­வி­ட­வில்லை என்று புகார்­கள் தலை­தூக்கி இருக்­கின்­றன.

இந்­தச் சூழ­லில் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் கொரோனா கண்­கா­ணிப்­பு­களை முடுக்கிவிட்டு இருக்­கிறார்.