மலேசியாவில் ஒரே நாளில் 235 பேர் பாதிப்பு

மலேசியாவில் ஒரே நாளில் 235 பேர் பாதிப்பு

1 mins read
76506d71-eb23-4231-af85-454039e9e9d8
கொவிட்-19 கிரு­மித் தொற்று மலே­சி­யா­வில் வேக­மாக பர­வி­வ­ரு­வ­தால் அந்­நாட்டு அர­சாங்­கம் நேற்று முன்­தி­னம் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு ஆணையை அறி­வித்­தது. மலே­சி­யா­வி­லி­ருந்து அன்றாடம் சிங்­கப்­பூருக்கு வந்து வேலை செய்­யும் ஊழி­யர்­களும் அவர்­க­ளது முத­லா­ளி­களும் மாற்று ஏற்­பா­டு­க­ளுக்கு விரைந்து செயல்­ப­டு­கின்­ற­னர். படம்: எஸ்டி, சோங் ஜுன் -

பெட்டாலிங் ஜெயா: மலேசியாவில் ஒரே நாளில் 235 பேர் கிருமி தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் சேர்த்து நேற்று பிற்பகல் வரை 2,031 பேருக்கு கிருமி தொற்றியிருக்கிறது என்று சுகாதார இயக்குநர் ஜெனரல் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா சொன்னார்.

செய்தியாளர் கூட்டத்தில் நேற்று பேசிய டாக்டர் ஹிஷாம், கிருமியால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்களில் 16 பேர் குணமடைந்து வீடு திரும்பி விட்டதாகக் கூறினார். இதுவரை மொத்தம் 215 பேர் கிருமி பாதிப்பிலிருந்து குணமடைந்து உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 45 பேர் உள்ளனர்.

விசாரணையில் புதிதாக பாதிக்கப்பட்ட 235 பேரில் 60 பேர் ஸ்ரீபெட்டாலிங் ஜெயாவில் நடைபெற்ற ஒன்றுகூடல் நிகழ்ச்சி தொடர்பானது என்பது தெரிய வந்துள்ளது.

மலேசியாவில் மொத்தம் 23 பேர் கிருமிக்கு பலியாகிவிட்ட னர்.