நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறிய 15 பேர் கைது

நடமாட்டக் கட்டுப்பாட்டை மீறிய 15 பேர் கைது

1 mins read
3be0da85-fe3a-4baf-9615-3f955d5adceb
மலேசியாவின் பெட்­டா­லிங் ஜெயா­வில் கடந்த 24 மணி நேரத்­தில் கட்­டுப்­பாட்டை மீறி வெளி­யில் சுற்­றிய 15 பேரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர். படம்: ராய்ட்டர்ஸ் -

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் கொரோனா கிருமி பர­வ­லைத் தடுத்து நிறுத்­து­வ­தற்­காக கடு­மை­யான நட­வ­டிக்­கை­கள் எடுக்­கப்­பட்டு வரு­கின்­றன. நட­மாட்­டக் கட்­டுப்­பா­டும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த நிலை­யில் பெட்­டா­லிங் ஜெயா­வில் கடந்த 24 மணி நேரத்­தில் கட்­டுப்­பாட்டை மீறி வெளி­யில் சுற்­றிய 15 பேரை போலி­சார் கைது செய்­துள்­ள­னர்.

இது குறித்து பேசிய பெட்­டா­லிங் ஜெயா மாவட்ட போலிஸ் துணை ஆணை­யர் நிக் எஸானி முக­மட் ஃபைசால், கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் சட்­டத்தை மீறி­யுள்­ள­னர் என்­றார்.

நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டை மீற வேண்­டாம் என்­றும் அவர் பொது­மக்­களை கேட்­டுக் கொண்­டார்.

"வீட்­டி­லேயே தங்­கி­யி­ருங்­கள், முக்­கி­ய­மான தேவைக்கு மட்­டுமே வெளியே செல்­லுங்­கள்," என்று அறிக்கை வாயி­லாக அவர் தெரி­வித்­தார்.

இதற்­கி­டையே சுகா­தார அமைச்­சில் பணி­யாற்­றும் 80 ஊழி­யர்­க­ளுக்கு கொரோனா கிருமி தொற்­றி­யி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. "கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் முன்­னணி ஊழி­யர்­கள் அல்ல," என்று ஆரம்­பக் கட்ட விசா­ர­ணை­யில் தெரிய வந்­துள்­ள­தாக சுகா­தார இயக்­கு­நர் ஜென­ரல் டாக்­டர் நூர் ஹிஷாம் அப்­துல்லா சொன்­னார்.