விசா வைத்திருந்தாலும் சீனாவுக்குள் நுழைய தடை

விசா வைத்திருந்தாலும் சீனாவுக்குள் நுழைய தடை

1 mins read
fae3eb83-239c-4da1-8449-342bb59d96ae
சீனாவின் ‌ஷங்காய் புடோங் அனைத்துலக விமான நிலையத்தில் பாதுகாப்புக் கவசத்துடன் பயணிகளைக் கண்காணிக்கும் காவல் அதிகாரி. படம்: ஏஎப்பி -

பெய்ஜிங்: முறையான விசா அல்லது குடியிருப்புக்கான அனுமதி அட்டை வைத்திருந்தாலும் சீனாவுக்குள் நுழைய அனைத்து வெளிநாட்டவர்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா கிருமி பரவலைக் கட்டுப்படுத்துவதற்கு எடுக்கப்படும் ஒரு தற்காலிக நடவடிக்கை இது என்று சீன வெளியுறவு அமைச்சு கூறியது. உள்நாட்டில் ஏற்படும் கிருமித்தொற்று சம்பவங்களைக் காட்டிலும் வெளிநாடுகளிலிருந்து வருவோரால் பதிவாகும் சம்பவங்கள் அதிகமாக உள்ளன.