எதிர்பார்த்திருந்த இத்தாலிக்கு ஏமாற்றம்

ரோம்: இத்­தா­லி­யில் பிப்­ர­வரி 23ஆம் தேதி­மு­தல் படிப்­ப­டி­யாக நடப்­புக்கு வந்த கடு­மை­யான முடக்­க­நி­லை­யால் இந்­நே­ரம் நாட்­டில் கொவிட்-19 கிரு­மித்­தொற்று பர­வல் மெது­வ­டை­யும் என்ற எதிர்­பார்ப்பு நில­வி­யது.

ஆனால் இவ்­வா­ரத் தொடக்­கத்­தில் சற்று குறைந்­தி­ருந்த கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­களும் மர­ணங்­களும் மீண்­டும் அதி­க­ரித்­தன.

நேற்று மாலை நில­வ­ரப்­படி 24 மணி­நே­ரத்­தில் 712 பேர் கிருமி பாதிப்­பால் உயி­ரி­ழந்­து­விட்­ட­னர்.

புதி­தாக 6,153 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். இத­னால் இத்­தா­லி­யில் கிரு­மித்­தொற்­றுக்கு பலி­யா­னோ­ரின் எண்­ணிக்கை 8,215 ஆக உயர்ந்­துள்­ளது. இந்த எண்­ணிக்­கையே கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்ட நாடு­களில் ஏற்­பட்ட உயி­ரி­ழப்­பு­களில் ஆக அதி­கம்.

அதி­லும் இந்த எண்­ணிக்­கை­யில் பாதி அள­வு­கூட வேறு நாடு­களில் பதி­வா­க­வில்லை. அத்­த­டன் இத்­தா­லி­யில் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 80,539ஐ எட்­டி­யுள்­ளது.

கொரோனா கிரு­மித்­தொற்­றின் மையப்­ப­கு­தி­யாக கரு­தப்­பட்ட சீனா­வில் தற்­போது 81,000க்கு மேலான சம்­ப­வங்­கள் பதி­வா­கி­யுள்ள நிலை­யில், இத்­தா­லி­யில் ஏற்­படும் சம்­ப­வங்­க­ளின் எண்­ணிக்கை அதை விஞ்சி விடு­வ­தாக உள்­ளது.

அடுத்த மாதம் 3ஆம் தேதி­யன்று முடக்­க­நிலை முடி­வ­டை­வ­தாக இருந்­தா­லும் கட்­டுப்­பா­டு­க­ளைத் தொட­ர­வேண்­டிய சூழ்­நிலை இருக்­கும் என்று நாட்­டின் லொம்­பார்டி பகுதி ஆளு­நர் கூறி­யி­ருந்­தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!