சோல்: வீட்டிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும் கூட்டங்களைத் தவிர்த்திடவும் தென்கொரியா அதன் மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது. சென்ற மாதம் இறுதியில் ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 900 புதிய கொரோனா கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகி வந்தன. ஆனால் கடந்த இரு வாரங்களாக அவை 100க்குள் அடங்கியுள்ளன. தென்கொரியாவில் குறைந்தது 9,478 கிருமித்தொற்று சம்பவங்கள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் நேற்று 146 பேருக்கு கிருமி தொற்றியதாக அறிவிக்கப்பட்டது. கொரானா கிருமித் தொற்று பாதிப்பால் அங்கு இறந்தவர்களின் எண்ணிக்கை 144 ஆனது.
தென்கொரியா: வீட்டிலேயே இருங்கள்
1 mins read
தென்கொரியாவின் இன்சியோன் விமான நிலையத்தில் வந்திறங்கும் பயணிகளுக்கு கொரோனா கிருமித்தொற்றுச் சோதனை நடத்தப்படுகிறது. படம்: இபிஏ-எஃப்இ -

