நாட்டுக்காக தொழிற்சாலையிலேயே முடங்கியிருக்கும் ஊழியர்கள்

நாட்டுக்காக தொழிற்சாலையிலேயே முடங்கியிருக்கும் ஊழியர்கள்

1 mins read
9fceacba-c59c-47e6-bc6a-f05152fe4910
துனிசியா தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் 150 ஊழியர்கள், ஒரு மாதத்திற்குத் தங்களை அங்கேயே தனிமைப்படுத்தியவாறு முகக் கவசங்களைத் தயாரித்து வருகின்றனர். படம்: ஏஎஃப்பி -

துனிசியா தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் 150 ஊழியர்கள், ஒரு மாதத்திற்குத் தங்களை அங்கேயே தனிமைப்படுத்தியவாறு முகக் கவசங்களைத் தயாரித்து வருகின்றனர்.

பெரும்பாலும் பெண்களைக் கொண்ட இக்கூட்டம், கொரோனா கிருமித்தொற்றுக்கு எதிராக நாடு போராடி வருவதால் தங்களின் நாட்டுப்பற்றை வெளிப்படுத்த இம்முடிவை எடுத்தது.

ஒவ்வொரு நாளும் 50,000 முகக்கவசங்களைத் தயாரிப்பதுடன் மற்ற பல மருத்துவப் பாதுகாப்புக் கருவிகளையும் இத்தொழிற்சாலை தயாரித்து வருகிறது.

தற்போதைய நிலவரப்படி துனிசியாவில் குறைந்தது 227 கொவிட்-19 கிருமித்தொற்று சம்பவங்களும் ஆறு மரணங்களும் ஏற்பட்டுள்ளன.

#துனிசியா #கொவிட்-19 #முகக்கவசம்

குறிப்புச் சொற்கள்