உலக அளவில் 600,000ஐ தாண்டிய கிருமித்தொற்று சம்பவங்கள்; 28,000ஐ நெருங்கும் உயிரிழப்புகள்

உலக அளவில் 600,000ஐ தாண்டிய கிருமித்தொற்று சம்பவங்கள்; 28,000ஐ நெருங்கும் உயிரிழப்புகள்

1 mins read
b9d0116f-f374-4a62-b22c-25a347322219
கொரோனா கிருமித்தொற்றால் உயிரிழந்தோரின் உடல்களுக்கான இறுதிச்சடங்கின் அங்கமாக இத்தாலியில் தேவாலயம் ஒன்றுக்கு ஆசிர்வாதத்துக்காக எடுத்துச் செல்லப்படும் உடல்கள். படம்: ANSA -
multi-img1 of 2

உலக அளவில் கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 600,000ஐ தாண்டிவிட்டதாக அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்ட தகவல்களின் ஏஎஃப்பி தொகுப்பு தெரிவிக்கிறது.

மொத்தம் 183 நாடுகள், பிரதேசங்களில் 605,010 கிருமித்தொற்று சம்பவங்களும் 27,982 மரணங்களும் பதிவாகியுள்ளன.

அமெரிக்காவில் 104,837 கிருமித்தொற்று சம்பவங்களும் 1,711 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இத்தாலியில் ஆக அதிகமாக 9,134 உயிரிழப்புகள் பதிவாகியுள்ள நிலையில் அங்கு 86,498 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளன.

ஸ்பியினில் கடந்த 24 மணி நேரத்தில் ஆக அதிகமாக 832 பேர் உயிரிழந்ததையடுத்து அங்கு உயிரிழப்புகளின் எண்ணிக்கை 5,690ஐ தொட்டது; அங்கு பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 72,248 என அந்நாட்டு அரசாங்கம் தெரிவித்தது.

புரூணையின் முதல் கொவிட்-19 மரணம் இன்று பதிவானது. 64 வயது ஆடவர் அங்கு கிருமித்தொற்று உறுதி செய்யப்பட்ட 25வது நபர்.

அறிகுறிகள் தென்பட்டு மருத்துவ சிகிச்சை நாடுவோருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் அடிப்படையில் மட்டுமே இத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அறிகுறிகள் ஏதும் தென்படாமல் இன்னும் பல்லாயிரக்கணக்கானோர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனும் செய்தி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் கிருமித்தொற்று பரவல் தொடங்கி வூஹானில் பயணத் தடை சற்று குறைக்கப்பட்டுள்ளது. அங்கேயே முடங்கியிருந்த பலர் சொந்த ஊர்களுக்குத் திரும்பத் தொடங்கியுள்ளனர்.

#கொவிட்-19, #உலக நிலவரம்

குறிப்புச் சொற்கள்