இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை கொண்டுவர ஏற்பாடுகள்

இந்தியாவில் சிக்கித் தவிக்கும் மலேசியர்களை கொண்டுவர ஏற்பாடுகள்

1 mins read
ccb9f170-d029-4b33-a282-65d51e77a48a
இந்­தி­யா­வில் சிக்­கித் தவிக்­கும் கிட்­டத்­தட்ட 1,988 மலே­சி­யர்­களை மீண்­டும் தாய்­நாட்­டுக்­குக் கொண்டு வரு­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் நடந்து வரு­வ­தாக நேற்று மலே­சிய மூத்த அமைச்­சர் இஸ்மாயில் சப்ரி யாக்­கோப் புத்ராஜெ­யா­வில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டம் ஒன்­றில் கூறி­னார். படம்: தி ஸ்டார் -

பெட்­டா­லிங் ஜெயா: இந்­தி­யா­வில் சிக்­கித் தவிக்­கும் கிட்­டத்­தட்ட 1,988 மலே­சி­யர்­களை மீண்­டும் தாய்­நாட்­டுக்­குக் கொண்டு வரு­வ­தற்­கான ஏற்­பா­டு­கள் நடந்து வரு­வ­தாக நேற்று மலே­சிய மூத்த அமைச்­சர் இஸ்மாயில் சப்ரி யாக்­கோப் புத்ராஜெ­யா­வில் நடை­பெற்ற செய்­தி­யா­ளர் கூட்­டம் ஒன்­றில் கூறி­னார்.

பஞ்­சாபில் உள்ள அம்­ரிட்­சர் பகு­தி­யின் மலே­சிய சீக்­கி­யர்­க­ளை­யும் இது உள்­ள­டக்­கும் என்று தற்­காப்பு அமைச்­ச­ரா­க­வும் பணி­யாற்­றும் திரு இஸ்­மாயில் சப்ரி தெரி­வித்­தார்.

மலே­சி­யர்­களை இந்­தி­யா­வி­லி­ருந்து கொண்டு வரு­வ­தற்கு 12 விமா­னங்­கள் ஏற்­பாடு செய்­யப்­பட்டு வரு­வ­தாக அவர் குறிப்­பிட்­டார். இதற்கு உதவி வரும் மலே­சிய இந்­திய காங்­கி­ரஸ் கட்­சிக்­குத் தன் நன்­றி­யை­யும் தெரி­வித்­தார்.

தற்­போது கிட்­டத்­தட்ட 60 நாடு­களில் 3,162 மலே­சி­யர்­கள் சிக்­கித் தவிப்­ப­தா­க­வும் சுமார் 2,612 பேர் மலே­சி­யா­வுக்­குக் கொண்டு வரப்­பட்­டு­விட்­ட­னர் என்­றும் அவர் பகிர்ந்­து­கொண்­டார்.

கைரோ­வில் உள்ள மலே­சி­யர்­கள் இன்று மீண்­டும் கொண்­டு­வ­ரப்­ப­டு­வ­தா­க­வும் திரு இஸ்­மாயில் குறிப்­பிட்­டார்.

இதற்­கி­டையே வெளி­நா­டு­களில் வசித்து வரும் மலே­சி­யர்­கள், அந்­தந்த நாடு விதிக்­கும் கட்­டுப்­பா­டு­க­ளுக்கு உட்­பட்டு நடக்­கு­மாறு மூத்த அமைச்­சர் நினை­வு­றுத்­தி­னார்.