மட்ரிட்: கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஸ்பெயினில் ஒரே நாளில் 838 பேர் மரணம் அடைந்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இந்நோயின் காரணமாக ஸ்பெயினில் இவ்வளவு பேர் ஒரே நாளில் இறந்திருப்பது இதுவே முதல்முறை.
கொரோனா கிருமித்தொற்று காரணமாக ஸ்பெயினில் இதுவரை 6,528 பேர் மாண்டுள்ளனர் என்று ஸ்பானிய சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அத்தியாவசிய சேவைத் துறையில் பணிபுரிபவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் அனைவரும் இரண்டு வாரங்களுக்கு வீட்டிலேயே இருக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

