சமூக விலகலை ஏப்ரல் 30 வரை நீட்டிக்கும் டிரம்ப்

2 mins read
6f65552b-89fe-4762-bbe9-a96d445ef72e
நியூயார்க்கின் எல்ம்ஹர்ஸ்ட் மருத்துவமனையில் கொரோனோ தொற்றுக்கான சோதனை செய்துகொள்ள காத்திருக்கும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வின் வீட்­டி­லேயே இருக்­கும் உத்­த­ரவை அந்­நாட்டு அதி­பர் டோனல்ட் டிரம்ப் அடுத்த மாதம் 30ஆம் தேதி வரை நீட்­டித்­துள்­ளார்.

உலக நாடு­க­ளி­லேயே தற்போது அமெ­ரிக்­கா­வில்­தான் ஆக அதி­க­மா­னோ­ருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டுள்­ளது.

அங்கு 141,000க்கும் மேற்­பட்­டோர் கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். குறைந்­தது 2,460 உயி­ரி­ழப்­பு­கள் ஏற்­பட்­டுள்­ளன.

இந்­நி­லை­யில், ஏப்­ரல் மாதம் நடு­வி­லி­ருந்து பொரு­ளி­யலை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களில் தீவி­ர­மாக இறங்­க­வி­ருப்­ப­தாக அதி­பர் டிரம்ப் அறி­வித்­தி­ருந்­ததை பலர் சாடி­னர். இந்த முடி­வி­லி­ருந்து அவர் நேற்று பின்­வாங்­கி­னார்.

"அடுத்த இரண்டு வாரங்­களில் அமெ­ரிக்­கா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று கார­ண­மாக ஆக அதி­க­மான மரண எண்­ணிக்கை பதி­வா­கக்­கூ­டும்.

"கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ரான போரில் வெல்­வ­தற்கு முன்பே வெற்­றியை அறி­விப்­பது பேரழிவை ஏற்­

ப­டுத்­தும். கிரு­மித்­தொற்றுக்கு எதி­ராக முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­களை அமெ­ரிக்­கர்­கள் எடுத்­தால் இந்­தக் கெட்ட கனவு விரை­வில் முடி­வுக்கு வரும்," என்­றார் அதி­பர் டிரம்ப்.

கிரு­மித்­தொற்­றுக்கு எதி­ராக அமெ­ரிக்கா எடுத்து வரும் நட­வ­டிக்­கை­கள் தோல்வி அடைந்­தால் அமெ­ரிக்­கா­வில் 100,000 பேரி­லி­ருந்து 200,000 பேர் மர­ணம் அடை­யக்­கூ­டும் என்று அமெ­ரிக்­கா­வின் ஓவ்­வாமை, தொற்­று­நோய் தடுப்­புக் கழ­கத்­தின் இயக்­கு­நர் டாக்­டர் ஆண்­டனி ஃபௌச்சி எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ளார்.

இதற்­கி­டையே, ஏப்­ரல் மாதம் நடுவில் கொரோனா கிரு­மித்­தொற்­றைத் தடுப்­ப­தற்­காக நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட கட்­டுப்­பாட்­டு­க­ளைத் தளர்த்த முத­லில் எடுக்­கப்­பட்ட முடிவு தவ­றா­னதா என்று அதி­பர் டிரம்ப்­பி­டம் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

இதற்­குப் பதி­ல­ளித்த அதி­பர், கட்­டுப்­பாட்­டு­க­ளைத் தளர்த்தி பொரு­ளி­ய­லில் கவ­னம் செலுத்த தாம் ஆசைப்­பட்­ட­தா­கக் கூறி­னார்.

வரும் ஜூன் 1ஆம் தேதிக்­குள் பொரு­ளி­யலை மீட்­கும் பணி­கள் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று தாம் நம்­பு­வ­தாக அதி­பர் டிரம்ப் தெரி­வித்­தார்.