தீப்பிடித்துக்கொண்ட ஆம்புலன்ஸ் விமானம்; 8 பேர் மரணம்

தீப்பிடித்துக்கொண்ட ஆம்புலன்ஸ் விமானம்; 8 பேர் மரணம்

1 mins read
526e1d69-97b2-444d-8579-de4c22b4aeb3
ணிலா விமான நிலையத்தின் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று தீப்பிடித்துக்கொண்டதில் அதில் இருந்த எட்டு பேர் உயிரிழந்தனர். படம்: இபிஏ -

மணிலா: மணிலா விமான நிலையத்தின் ஓடுபாதையில் சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸ் விமானம் ஒன்று தீப்பிடித்துக்கொண்டதில் அதில் இருந்த எட்டு பேர் உயிரிழந்தனர்.

கனடாவைச் சேர்ந்த நோயாளி, அவரது அமெரிக்க நண்பர், மூன்று விமானிகள், ஒரு மருத்துவர், ஒரு தாதி ஆகியோர் மாண்டனர்.

இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் மாலை நிகழ்ந்தது.

தீக்கு இரையான அந்த விமானம் லயன்ஏர் நிறுவனத்துக்குச் சொந்தமானது.

தீ விபத்து நிகழ்ந்தபோது அந்த விமானம் ஜப்பான் தலைநகர் தோக்கியோவுக்குப் புறப்பட இருந்ததாக பிலிப்பீன்ஸ் விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

தீச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படுவதாக மணிலா அனைத்துலக விமான நிலைய ஆணையம் கூறியது. படம்: இபிஏ