வீட்டிலேயே இருக்குமாறு மாஸ்கோ மக்களுக்கு உத்தரவு

வீட்டிலேயே இருக்குமாறு மாஸ்கோ மக்களுக்கு உத்தரவு

1 mins read
fdbf580a-9f05-4951-a7d7-ad5f9e4cc041
மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கம். படம்: இபிஏ-இஎஃப்இ -

மாஸ்கோ: ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் கொரோனா கிருமிப் பரவலை எதிர்கொள்ள வீட்டிலேயே இருக்குமாறு அனைவருக்கும் அந்நகர மேயர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவு வயது வரம்பின்றி அனைத்து மாஸ்கோவாசிகளுக்கும் பொருந்தும் என்றார் திரு செர்கே சொப்யானின்.

"ஐரோப்பா, அமெரிக்கா ஆகியவற்றின் பெரிய நகரங்களில் கொரோனா கிருமித்தொற்று மோசமடைந்துள்ளது. இதனால் எங்களது மக்களின் நலன் தொடர்பான கவலை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது," என்றார் திரு சொபியானின்.

மருத்துவ அவசரநிலை ஏற்பட்டால் மாஸ்கோவாசிகள் தங்கள் வீட்டைவிட்டு வெளியேற அனுமதிக்கப்படுவர். அத்தியாவசியத் துறைகளில் பணிபுரிபவர்கள் தங்கள் பணியிடத்துக்குச் செல்லலாம். அதுமட்டுமல்லாது, உணவு, மருந்து ஆகியவற்றை வாங்கவும் வெளியே செல்லலாம்.