மோண்ட்ரியேல்: கொரோனா கிருமித்தொற்றிலிருந்து தமது மனைவி சோஃபி குணமடைந்துள்ளபோதிலும் தொடர்ந்து சுயமாக தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் டுரூடோ தெரிவித்துள்ளார்.
கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதற்கான அறிகுறிகள் இல்லாதபோதிலும் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ள ஒருவருடன் ஒரே வீட்டில் வசித்து வந்ததால் தொடர்ந்து தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாக திரு டுரூடோ கூறினார்.
திருமதி டுரூடோ எப்போது முழுமையாகக் குணமடைந்தார் என்று தெளிவாக தெரியவில்லை என்பதால் மேலும் 14 நாட்களுக்கு தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ள இருப்பதாக திரு டுரூடோ தெரிவித்தார்.

