ஃபிராங்ஃபர்ட்: கொரோனா கிருமித்தொற்றால் ஏற்படும் பொருளியல் நெருக்கடி குறித்து கவலை அடைந்த ஜெர்மனின் அமைச்சர் ஒருவர் மனவுளைச்சல் காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஹெஸ்ஸி மாநிலத்தின் நிதியமைச்சரான 54 வயது திரு தாமஸ் ஷேவரின் உடல் கடந்த சனிக்கிழமையன்று ரயில் தண்டவாளத்துக்கு அருகே கண்டெடுக்கப்பட்டது.
கொரோனா நெருக்கடியால் உயிரை மாய்த்துக்கொண்ட ஜெர்மன் அமைச்சர்
1 mins read
கொரோனா கிருமித் தொற்றால் ஜெர்மனியில் ஏற்பட்டுள்ள பொருளியல் நெருக்கடியைச் சமாளிக்க நிறுவனங்களுக்கும் ஊழியர்களுக்கும் உதவும் வகையில் இரவு பகலாக பாடுபட்டு வந்தவர் திரு தாமஸ் ஷேவர் என்று கூறப்படுகிறது. இவர் கடந்த பத்தாண்டுகளாக ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநிலத்தின் நிதியமைச்சராக இருந்து வந்தார். படம்: இபிஏ-இஎஃப்இ -

