பனாமா சிட்டி: ஸாண்டம் எனும் சொகுசு கப்பலில் இருக்கும் சிலருக்கு கொரோனா கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதை அடுத்து, அதில் இருக்கும் பயணிகளை இறக்கிவிட துறைமுகங்கள் அனுமதி வழங்க மறுத்துள்ளன.
இதையடுத்து பயணிகளை இறக்கிவிட துறைமுகம் ஒன்றை அந்தச் சொகுசு கப்பல் தேடி வருகிறது. இம்மாதம் 14ஆம் தேதியிலிருந்து எந்த ஒரு துறைமுகத்திலும் நங்கூரமிட முடியாமல் அக்கப்பல் பசிபிக் கடலில் வலம் வந்தது. 1,800 பயணிகளைக் கொண்ட அக்கப்பல் கடந்த ஞாயிறன்று பனாமா கால்வாய்க்குள் நுழைந்தது.

