மலேசியா முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு

மலேசியா முழுவதும் கிருமி நாசினி தெளிப்பு

2 mins read
39bc4d62-1ce5-4615-b287-f3d92fcc769b
நடமாட்டக் கட்டுப்பாடு காரணமாக பத்துமலை முருகன் கோயில் படிகளில் ஆள் நடமாட்டமே இல்லை. நடமாட்டக் கட்டுப்பாடு உத்தரவின் 2வது கட்டமாக நேற்று பேரங்காடிகளுக்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. அதன்படி காலை 8.00 மணி முதல் மாலை 8.00 மணி வரையில்தான் பேரங்காடிகள் செயல்பட முடியும். படம்: ஏஎஃப்பி -

கோலா­லம்­பூர்: மலே­சியா, கொரோனா கிரு­மித்­தொற்று பர­வு­ வ­தைத் தடுக்க நாடு முழு­வ­தும் மருந்­த­டித்து சுத்­தப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை­யைத் தொடங்கி இருக்­கிறது.

அதிக ஆபத்­துள்ள சில இடங்­கள் நேற்று முதல் கிரு­மி­நா­சினி மருந்­து­கள் அடித்து சுத்­தப்­ப­டுத்­தப் படு­வ­தாக பெர்­னாமா செய்தி நிறு­வ­னம் தெரி­வித்­தது.

தலை­ந­கர் கோலா­லம்­பூ­ரில் பரந்த அள­வி­லான மருந்­த­டிப்பு நட­வ­டிக்­கையை ஞாயிற்­றுக்­கி­ழமை கோலா­லம்­பூர் நகர மண்­ட­பம் மேற்­கொண்­டது.

பேராக் மாநிலத்தில் உள்ளூர் அதிகாரிகள், பொது இடங்­கள், பூங்­காக்­கள், வழி­பாட்டு தலங்கள், போலிஸ் நிலை­யங்­களை மருந்­த­டித்­துச் சுத்­தப்­ப­டுத்­தி­னர்.

ஈப்போ ரயில் நிலை­யத்­தி­லும் தாப்பா மாவட்ட போலிஸ் தலைமை யகத்­தி­லும் தீய­ணைப்­புத் துறை மருந்­த­டித்­தது.

இதே போன்ற நட­வ­டிக்­கை­கள், சிலாங்­கூர், மலாக்கா, ஜோகூர் ஆகி­ய இடங்களில் சந்­தை­களி­லும் பொதுக் கழி­வ­றை­க­ளி­லும் உண­வுக் கடை­க­ளி­லும் பேருந்து நிலை­யங்­க­ளி­லும் மேற்­கொள்­ளப்­பட்­டன.

பினாங்கு, திரங்­கானு, கெடா மாநி­லங்­களில் நேற்று சுத்­தப்­ப­டுத்­தும் நட­வ­டிக்­கை தொடங்­கி­யது.

கொரோனா கிரு­மி­யைக் கட்டுப்­ ப­டுத்­தும் முயற்­சி­யாக மலே­சியா மார்ச் 18ஆம் தேதி பொது­மக்­கள் நட­மாட்­டக் கட்­டுப்­பாட்டு உத்­த­ர­வு­க­ளைப் பிறப்­பித்­தது.

பய­ணக் கட்­டுப்­பா­டு­களும் நடப்­புக்கு வந்­தன. அந்த உத்­த­ரவு ஏப்­ரல் 16 வரை நீட்­டிக்­கப்­பட்டு உள்­ளது.

அந்த விதியை மீறி­ய­தற்­காக நூற்­றுக்­க­ணக்­கானவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மலே­சி­யா­வில் கொரோனா கிருமி 30 பேரை கொன்­று­விட்­டது. 2,400 பேர் பாதிக்­கப்­பட்டு இருக்­கி­றார்­கள்.

தென்­கி­ழக்கு ஆசி­யா­வில் வேறு எந்த நாட்­டி­லும் இந்த அள­வுக்கு அதி­கம் பேர் பாதிக்­கப்­படவில்லை.

கொரோனா கார­ண­மாக உல­கின் பல பகு­தி­க­ளி­லும் நடப்­புக்கு வந்­தி­ருக்­கும் பய­ணக் கட்­டுப்­பா­டு ­க­ளால் நாடு திரும்ப முடி­யா­மல் தவிக்­கும் மலே­சி­யர்­க­ளை தாய­கம் கொண்டு வரு­வ­தற்­காக மலே­சிய ஏர்­லைன்ஸ் நிறு­வ­னம், வரும் ஏப்­ரல் முதல் மே வரை சில அனைத்­து­ல­கச் சேவை­க­ளைத் தொடங்­கும் என்று தெரி­விக்­கப்­பட்டு உள்­ளது.