ஹுபெய்யில் தொடர்ந்து ஆறு நாட்களாக கிருமி தொற்று சம்பவங்கள் இல்லை

ஹுபெய்யில் தொடர்ந்து ஆறு நாட்களாக கிருமி தொற்று சம்பவங்கள் இல்லை

2 mins read
5207ef01-8b8f-46af-af8d-26e951a3fe80
சீனா­வில் புதி­தாக 31 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது நேற்று முன்­தி­னம் (மார்ச் 29) உறு­தி­செய்­யப்­பட்­டது.  முந்­தைய நாள் பதி­வான 45 சம்­ப­வங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது குறைவு. வூஹானில் பொதுப்போக்குவரத்தில் பயணம் செய்யும் மக்கள் பாதுகாப்பாக முகக் கவசம் அணிந்துசெல்வதை வழக்கமாக்கிக் கொண்டனர். படம்: இபிஏ-இஎஃப்இ -

பெய்ஜிங்: சீனா­வில் புதி­தாக 31 பேருக்கு கொரோனா கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­பது நேற்று முன்­தி­னம் (மார்ச் 29) உறு­தி­செய்­யப்­பட்­டது.

அவர்­களில் ஒரு­வ­ருக்கு உள்­ளூ­ரில் கிரு­மித்­தொற்று ஏற்­பட்­ட­தாக அந்­நாட்டு தேசிய சுகா­தார ஆணை­யம் தெரி­வித்­தது.

முந்­தைய நாள் பதி­வான 45 சம்­ப­வங்­க­ளு­டன் ஒப்­பி­டு­கை­யில் இது குறைவு.

கிரு­மித்­தொற்று பாதிப்­பால் மேலும் நால்­வர் உயி­ரி­ழந்­த­தாக ஆணை­யம் நேற்று வெளி­யிட்ட அறிக்­கை­யில் குறிப்­பிட்­டது.

அவர்­க­ளை­யும் சேர்த்து, சீனா­வில் கிருமியால் உயி­ரி­ழந்­த­வர்­களின் எண்­ணிக்கை நேற்று நில­வ­ரப்­படி 3,304ஆக பதி­வா­னது.

அந்­நாட்­டில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­னோ­ரின் எண்­ணிக்கை 81,470ஆக உயர்ந்­தது.

கொரோனா கிரு­மித்­தொற்று தொடங்­கிய ஹுபெய் மாநி­லத்­தில் நேற்று முன்­தி­னம் தொடர்ச்­சி­யாக ஆறா­வது நாளாக புதிய கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் பதி­வா­க­வில்லை.

அறு­பது மில்­லி­யன் மக்கள்­ தொ­கை­யைக் கொண்ட ஹுபெய் மாநி­லத்­தில் பய­ணக் கட்­டுப்­பா­டு­கள் தளர்த்­தப்­பட்­டுள்­ளன. சீனா­வின் மற்ற பகு­தி­க­ளுக்கு உள்­நாட்டு விமா­னச் சேவை­கள் தொடங்கப் பட்டுள்ளன.

எனி­னும், ஹுபெ­ய்யி­லி­ருந்து சீனா­வின் வட­மேற்கு மாநி­ல­மான கான்­சு­வுக்கு பய­ணம் செய்த நபர் ஒரு­வ­ருக்­கு கிரு­மித்­தொற்று ஏற்­பட்­டி­ருப்­ப­தாக தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சீனா­வில் கொரோனா கிரு­மித்­தொற்­றால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளின் எண்­ணிக்கை கணி­ச­மாக குறைந்­துள்ள போதி­லும், வெளி­நா­டு­களில் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளாகி சீனா வரு­ப­வர்­க­ளால் மீண்­டும் மற்­றொரு கிரு­மித்­தொற்று அலை எழும் அபா­யம் குறித்து பெய்­ஜிங் கவலை அடைந்­துள்­ளது. நாட்டில் கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த, வெளிநாட்டினர் சீனாவுக்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது.

சீனாவுக்கு வரும் அனைத்துலக விமானச் சேவைகளும் குறைக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கிருமித்தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உள்ள சிறிய, நடுத்தர நிறுவனங்களைப் பாதுகாக்கும் வகையில் ஆதரவுக் கொள்கைகளை அரசாங்கம் திருத்தி அமைக்கும் என்று சீன அதிபர் ஸி ஜின்பிங் உறுதி அளித்து இருக்கிறார்.

ஷெஜியாங் என்ற கிழக்கு மாநிலத்தில் நிங்போ என்ற நகரில் ஒரு தொழிற்சாலைக்கு ஞாயிற்றுக் கிழமை சென்ற அதிபர் ஸி, கொரோனா ஒழிப்புப் போர் ஒருபுறம் நடந்தாலும் சீன நிறுவனங்கள் தீவிரமாகச் செயல்படத் தொடங்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.