அரிசி ஏற்றுமதிக்கு கம்போடியா தடை

அரிசி ஏற்றுமதிக்கு கம்போடியா தடை

1 mins read
1094dd52-4226-4aae-b6cd-6e63b74faff7
கம்போடியா ஆண்டுக்கு 500,000 டன் அரிசி ஏற்றுமதி செய்கிறது. கொரோனா கிருமித் தொற்று பாதிப்பால், அந்நாடு ஏப்ரல் 5ஆம் தேதி முதல் அரிசி ஏற்றுமதிக்குத் தடை விதித்துள்ளது. படம்: ஏஎப்பி -

நோம்பென்: கம்போடியா அரசாங்கம் அரிசி ஏற்றுமதிக்கு தடை விதித்துள்ளது. உள்ளூர் தேவையை உறுதி செய்யும் நோக்கத்தில் சில வகை அரிசிக்கு ஏப்ரல் 5ஆம் தேதியிலிருந்து ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக பிரதமர் ஹுன் சென் தெரிவித்தார். கம்போடியா ஆண்டுக்கு 500,000 டன் அரிசி ஏற்றுமதி செய்கிறது. உலகிலேயே அதிக அளவு அரிசி ஏற்றுமதி செய்யும் நாடுகளில் வியட்னமாம் மூன்றாவது இடத்தில் உள்ளது.