30 மில்லியன் மக்களை தனிமைப்படுத்த இந்தோனீசியா திட்டம்

1 mins read
04002fd3-7b42-408b-948d-ba2290ff2c40
இந்ேதானீசியாவின் கலவரத் தடுப்பு போலிசார் சாலைகளில் கிருமி நாசினியைத் தெளிக்கின்றனர். படம்: ஏஎஃப்பி -

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சியா, தலை­ந­க­ரில் வசிக்­கும் ஏறக்­கு­றைய 30 மில்­லி­யன் மக்­களை தனி­மைப்­ப­டுத்­த­வும் அதனை சுற்­றி­யுள்ள வட்­டா­ரத்­தை­ மூட­வும் திட்­ட­மிட்­டுள்­ளது.

கொரோனா கிருமி பர­வ­லுக்கு எதி­ராக இந்த அதி­ரடி நட­வ­டிக்­கை­யை எடுக்க அது முடிவு செய்­துள்­ளது.

உல­கிலேயே மக்­கள் தொகை அதி­கம் கொண்ட நாடுகளில் நான்­கா­வது இடத்தில் உள்ள இந்­தோ­னீ­சி­யா­வில் கிரு­மியால் 100 பேருக்கு மேல் பலி­யா­கி­விட்­ட­னர்.

நேற்று அமைச்­ச­ர­வைக் கூட்­டத்­தில் பேசிய அதி­பர் ஜோக்கோ விடோடோ, கிருமி பர­வ­லின் தொடரை முறி­ய­டிக்க தெளி­வான நட­வ­டிக்­கை­கள் தேவை என்­றார்.

அதி­பர் விடோடோ, கிரு­மிக்கு எதி­ராக புதிய கட்­டப் போரைத் தொடங்­கி­யி­ருப்­ப­தாக அவ­ரது பேச்­சா­ளரான ஃபட்ஜ்­ரோயல் ராச்­மேன் தெரி­வித்­தார். சுகா­தார தனிமை, பாது­காப்­பான இடை­வெளி ஆகி­ய­வை­யும் அரசாங்கத்தின் திட்டங் களில் அடங்­கும்.

ஆனால் அதி­கா­ரி­கள் எந்த வகை­யில் பாது­காப்­பான இடை­வெ­ளியை அம­லாக்­கு­வார்­கள் என்­பது பற்றி அதி­பர் விடோடோ விளக்­க­வில்லை. தலை­ந­கர் ஜகார்த்­தா­வில் ஏற்கெனவே அவ­ச­ர­நிலை பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. இத­னால் பள்­ளி­கள், திரை­ய­ரங்­கு­கள், பொழுதுபோக்கு விடு­தி­கள் இரு வாரங்­க­ளுக்கு மூடப்­பட்­டுள்­ளன.

இந்த நிலையில் கடைசி ஆயுதமாக மக்­களை தனி­மை­யாக்­கு­வது பற்றி அர­சாங்­கம் பரி­சீ­லித்து வருவதாக அந்­தப் பேச்­சா­ளர் சொன்­னார்.

கொரோனா கிரு­மி­யால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் எண்ணிக்கை அதி­ க­ரித்­துள்­ளதால் மக்­கள் நட­மாட்­டத்­தைக் கட்­டுப்­ப­டுத்துவது பற்றி ஆராயப்படுவதாக அவர் சொன்னார்.

ஜகார்த்­தா­வில் மட்­டும் 698 பேருக்கு கிரு­மி தொற்­றி­யுள்­ளது. இதுவரை 122 பேர் கிருமிக்கு பலி­யா­கி­விட்­ட­னர். தலை­ந­கரை முடக்­கு­வ­தால் கிருமி பர­வ­லைக் கட்­டுப்­ ப­டுத்த முடி­யும் என்று இந்தோனீசியா அரசு நம்புகிறது.