'நடுத்தர வயதினருக்கும் பாதிப்பு அதிகம்'

'நடுத்தர வயதினருக்கும் பாதிப்பு அதிகம்'

1 mins read
e1d930df-b901-48e5-89ab-fc1346e7ae39
கிரு­மித்தொற்­றால் உயி­ரி­ழக்­கும் அபா­யம் மற்­றும் கடு­மை­யாகப் பாதிக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு முதி­ய­வர்­கள் மட்­டு­மல்­லா­மல், நடுத்­தர வய­தி­ன­ருக்­கும் அதி­க­ள­வில் உள்­ள­தாக பிரிட்­ட­னின் புதிய ஆராய்ச்சி ஒன்று தெரி­விக்­கிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

பாரிஸ்: கிரு­மித்தொற்­றால் உயி­ரி­ழக்­கும் அபா­யம் மற்­றும் கடு­மை­யாகப் பாதிக்­கப்­ப­டு­வ­தற்­கான வாய்ப்பு முதி­ய­வர்­கள் மட்­டு­மல்­லா­மல், நடுத்­தர வய­தி­ன­ருக்­கும் அதி­க­ள­வில் உள்­ள­தாக பிரிட்­ட­னின் புதிய ஆராய்ச்சி ஒன்று தெரி­விக்­கிறது.

சீனா­வில் பதி­வான கிரு­மித் தொற்று சம்­ப­வங்­கள் பற்­றிய புதிய விரி­வான ஆய்­வில் இது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டுள்­ளது.

கிரு­மித் தொற்று உறுதி செய்­யப்­பட்ட 3,600க்கும் மேற்­பட்ட சம்­ப­வங்­க­ளை­யும் வூஹா­னில் இருந்து வெளி­யே­றிய நூற்­றுக்­க­ணக்­கான பய­ணி­க­ளி­டம் இருந்து திரட்­டப்­பட்ட தக­வல்­க­ளை­யும் பிரிட்­டன் ஆராய்ச்­சி­யா­ளர்­கள் ஆய்வு செய்­த­னர்.

கடு­மை­யாக பாதிக்­கப்­பட்டு மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­ப­வர்­க­ளி­டையே வயது முக்­கிய கார­ணி­யாக இருந்­ததை அவர்­கள் கண்­ட­றிந்­த­னர்.

80 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களில் 18 விழுக்­காட்­டி­னர் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வதாகவும் அவர்­களை அடுத்து, 50 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­களிடையே அது 8.2 விழுக்­கா­டாக உள்­ளது.

நாற்­ப­து­களில் உள்­ள­வர்­களில் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வது 4 விழுக்­கா­டாக உள்­ளது.

20 வய­துக்­கும் குறைந்­த­வர்­கள் 0.04 விழுக்­காட்­டி­னரே கடு­மை­யாக பாதிக்­கப்­பட்­ட­னர். தி லன்­செட் தொற்று நோய் இத­ழில் இந்த ஆய்­வ­றிக்கை வெளி­யா­னது.

"உறுதி செய்­யப்­ப­டாத சம்­ப­வங்­கள் இருக்­க­லாம், ஆனால் எங்­கள் பகுப்­பாய்வு 50 வய­துக்கு மேற்­பட்­ட­வர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் அனு­ம­திக்­கப்­ப­டு­வது 50 வய­திற்குக் குறைந்­த­வர்­களைவிட அதி­க­மாக உள்­ளது என்­ப­தைக் காட்­டு­கிறது.

"மேலும் அதிக எண்­ணிக்­கை­யி­லான சம்பவங்கள் அபா­ய­க­ர­மா­ன­தாக இருக்­கக்­கூ­டும்," என்­றார் துணை ஆய்­வா­ள­ரான அஸ்ரா கனி.