கொரோனா கிருமி பாதிப்பால் 11 வயது சிறுமி மரணம்

1 mins read
074c29ad-a03d-4a70-8a64-3680768e8c0f
இந்தோனீசியாவின் வடக்கு சுமத்ராவில் உள்ள மேடன் நகரின் மூடப்பட்ட கடைத்தெருவில் நடந்து செல்லும் மக்கள். படம்: இபிஏ -

இந்தோனீசியாவில் கொரோனா கிருமித்தொற்று பாதிப்பால் 11 வயது சிறுமி உயிரிழந்ததாக அதிகாரிகள் இன்று (ஏப்ரல் 1) தெரிவித்தனர்.

அந்நாட்டில் கொரோனாவால் உயிரிழந்த ஆக வயது குறைந்த நபர் அவர்.

அச்சிறுமிக்கு டெங்கி காய்ச்சலும் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் 19ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்குக் காய்ச்சலும் சுவாசப் பிரச்சினைகளும் ஏற்பட்டன. அதற்கு அடுத்த நாள் அச்சிறுமி உயிரிழந்தார்.

அச்சிறுமிக்கு கொரோனா கிருமித்தொற்று இருந்தது இந்த வாரம்தான் பரிசோதனையில் உறுதிசெய்யப்பட்டது.

இதற்கிடையே, இந்தோனீசியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 157ஆக அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

உயிரிழந்தவர்களில் 11 மருத்துவர்களும் அடங்குவர். அந்நாட்டில் ஒரே வாரத்தில் உயிரிழப்புகள் கிட்டத்தட்ட மூன்று முடங்காக அதிகரித்துள்ளது.

அந்நாட்டில் கிருமித்தொற்று கண்டவர்களின் எண்ணிக்கை 1,677ஆக கூடியுள்ளது.

#இந்தோனீசியா #கொவிட்-19

குறிப்புச் சொற்கள்