ரஷ்ய அதிபர் புட்டினைச் சந்தித்த மருத்துவருக்குத் தொற்று

ரஷ்ய அதிபர் புட்டினைச் சந்தித்த மருத்துவருக்குத் தொற்று

1 mins read
aad5f3da-c83c-48d3-b173-bdf9881c82bd
மார்ச் 24ஆம் தேதியன்று மாஸ்கோவில் உள்ள மருத்துவமனை ஒன்றுக்குச் சென்ற ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டினும் தலைமை மருத்துவர் டெனிசும் முகக்கவசம், கையுறை அணியாமல் கைகுலுக்கிக் கொண்டனர். படம்: ராய்ட்டர்ஸ் -

மாஸ்கோ: ரஷ்ய அதி­பர் விளா­டி­மிர் புட்­டின் கடந்த செவ்­வாய்க்­கி­ழமை, மாஸ்­கோ­வில் கொரோனா தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் அனு­ம­திக்­கப்­பட்­டுள்ள மருத்­து­வ­ம­னைக்­குச் சென்­றிருந்தார்.

அப்­போது அந்த மருத்­து­வ­ம­னை­யின் தலைமை மருத்­து­வர் டெனிஸ் புரோட்­சென்கோ உட்­பட மருத்­து­வர்­கள், செவி­லி­யர்­கள் என பல்­வேறு மருத்­துவ ஊழி­யர்­க­ளு­டன் அவர் ஆலோ­சனை நடத்­தி­னர்.

டெனி­சி­டம் பேசும்­போது புட்­டின் எந்­த­வித முக­க்கவசமும் அணி­யா­மல், கைக­ளைக் குலுக்­கி­ய­படி சாதா­ர­ண­மாக நடந்­து­கொண்­டார். இந்­நி­லை­யில், புட்­டி­னு­டன் பேசிய மருத்­து­வர் டெனிஸ் புரோட்­சென்­கோ­வுக்கு தொற்று உள்­ளது தற்­போது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

இதை­ய­டுத்து தனி­மைப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள டெனி­சின் உடல்­நிலை சீராக உள்­ள­தாகத் தக­வல் வெளி­யா­கி­யுள்­ளது. இதற்­கி­டை­யில், புட்­டி­னுக்­குத் தொடர்ந்து மருத்­துவ பரி­சோ­த­னை­கள் செய்­யப்­பட்டு வரு­வ­தா­க­வும் அவர் உடல்­நிலை நல­மாக இருப்­ப­தா­க­வும் கிரம்­ளின் மாளிகை செய்­தித்­தொ­டர்­பா­ளர் தெரி­வித்தார்.

ரஷ்­யா­வில் இது­வரை 2,337 பேருக்குக் கிரு­மித் தொற்று உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. 17 பேர் உயி­ரி­ழந்­துள்­ள­னர்.