இத்தாலிய மருத்துவர்கள் எச்சரிக்கை

1 mins read
9fc96075-db84-471d-bac9-7e14f7676047
ரோம் நகரின் மத்திய நகர்ப்பகுதியில் சுற்றுக்காவல் பணியில் ஈடுபட்டுள்ள போலிஸ்காரர்கள். படம்: ஏஎஃப்பி -

ரோம்: கிரு­மித் தொற்று உறுதி செய்­யப்­பட்ட நோயா­ளி­களை மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வெளி­யேற்றி காப்­ப­கங்­க­ளுக்கு அனுப்­பும் அர­சாங்க கொள்கை 'உயி­ரி­யல் குண்­டு­களை' உரு­வாக்­குவது போன்­றது என்று இத்­தா­லிய மருத்­து­வர்­கள் மற்­றும் சங்­கங்­கள் எச்­ச­ரித்­துள்­ளன.

தீவிர சிகிச்­சை­யில் உள்ள 4,000க்கும் அதி­க­மா­னோர் உட்­பட 28,000க்கும் மேற்­பட்­ட­வர்­கள் மருத்­து­வ­ம­னை­யில் இருப்­ப­தால், படுக்­கை­கள் விரை­வில் விடு­விக்­கப்­பட வேண்­டும் என்­ப­தா­லும் வீட்­டில் தனி­மைப்­ப­டுத்­திக் கொண்டு குண­ம­டைய முடி­யா­த­வர்­கள் காப்­ப­கங்­கள் அல்­லது விடு­தி­க­ளுக்கு மாற்­றப்­ப­டு­கி­றார்­கள்.

இத்­தாலி ஏற்­கெ­னவே 12,400 உயி­ரி­ழப்­பு­க­ளைச் சந்­தித்­துள்ள நிலை­யில், அங்­குள்ள 7,000 காப்­ப­கங்­களில் வசிக்­கும் 300,000த்திற்­கும் மேற்­பட்­ட முதியவர்களின் பாது­காப்பு குறித்தும் உயிரிழப்பு அதிகரிக்கக்கூடிய சாத்தியம் உள்ளது தொடர்பாகவும் அவர்­கள் கவ­லை தெரி­வித்­துள்­ள­னர்.

இதற்கிடையே, இத்தாலியின் முடக்க நிலை வரும் 13ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அதன் சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.