கொவிட்-19: கடும் நெருக்கடியை எதிர்நோக்கும் பிரிட்டன்

லண்­டன்: பிரிட்­ட­னில் கடந்த இரண்டு வாரங்­களில் மட்­டும் ஏறக்­கு­றைய ஒரு மில்­லி­யன் பேர் “யூனி­வர்­சல் கிர­டிட்” என்­ற­ழைக்­கப்­படும் நல்­வாழ்வு வழங்­கீட்­டுத் தொகை பெற்­றுள்­ள­னர்.

இத­னால் பிரிட்­ட­ன் பெரிய அள­வில் பொரு­ளி­யல் நெருக்­க­டியை எதிர்­நோக்­கு­கிறது.

கொரோனா கிரு­மித் தொற்­றுக்கு எதி­ராக அந்­நாட்டு பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் அந்­நாட்­டில் முடக்­க­நி­லையை அறி­வித்­தார். அதைத் தொடர்ந்து ஏரா­ள­மா­னோர் நல்வாழ்வு நிதிக்கு விண்­ணப்­பித்­த­னர்.

மார்ச் மாதம் 16ஆம் தேதிக்­கும் 31ஆம் தேதிக்­கும் இடைப்­பட்ட காலத்­தில் 950,000 பேர் இந்த வழங்­கீட்­டுத் தொகைக்கு விண்­ணப்­பித்து வழங்­கீ­டு­க­ளைப் பெற்­ற­னர்.

இந்த நல்­வாழ்வு வழங்­கீட்டு நிதி என்­பது வேலை­யில்­லா­தோர் அல்­லது குறைந்த வரு­மா­னம் ஈட்­டு­வோர் ஆகி­யோ­ருக்கு அர­சாங்­கம் வழங்­கும் நிதி­யா­கும்.

அதே­போல் இப்­போது ஏற்­பட்­டுள்ள முடக்­க­நி­லை­யால் பொருள் ஈட்ட வழி­யின்றி மக்­கள் தவித்து வரு­கின்­ற­னர்.

வர்த்­த­கங்­க­ளுக்­கும் பொது நட­வ­டிக்­கை­க­ளுக்­கும் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.

நல்­வாழ்வு நிதிக்கு விண்­ணப்­பிப்­போர் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்து வரு­வ­தால், கொரோனா கிரு­மித் தொற்­றைச் சமா­ளிக்க அர­சாங்­கம் எடுத்­துள்ள நட­வ­டிக்­கை­கள் குறித்து கேள்­வி­கள் எழுந்­துள்­ளன.

இது­போன்ற அவ­சர நிலையில் பிர­த­மர் போரிஸ் கையாண்ட விதம் குறித்து சர்ச்­சை­கள் கிளம்­பி­யுள்­ளன.

முன்­ன­தாக அர­சாங்­க­மும் பேங்க் ஆப் இங்­கி­லாந்­தும் இணைந்து பொரு­ளி­யலை கட்­டுக்­குள் கொண்டு வரும் முயற்­சி­யில் துரி­த­மாக இறங்­கி­யுள்­ள­தாக மக்­க­ள் வெகுவாகப் பாராட்டினர்.

ஆனால் இப்­போது பிரிட்­டன் வேலை இழந்து தவிக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது மேலும் அர­சாங்­கத்­தின் மீது மக்­க­ளுக்கு கோபத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

சம்­ப­ளக் குறைப்பு, ஆட்­கு­றைப்பு, நிறு­வ­னங்­கள் மூடல் போன்­ற­வற்­றால் பிரிட்டிஷ் மக்­கள் பெரி­தும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

அத­னால்­தான் நல்­வாழ்வு நிதிக்கு விண்­ணப்­பிப்­போர் எண்­ணிக்கை நாளுக்கு நாள் அதி­க­ரித்த வண்­ணம் உள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

இந்­நி­லை­யில் கொரோனா கிரு­மித் தொற்று நெருக்­க­டி­யால் பெரிய அள­வில் பாதிக்­கப்­பட்­டுள்ள நிறு­வ­னங்­க­ளுக்கு அர­சாங்க ஆத­ர­வு­டன் கடன் அளிப்­ப­தாக உறு­தி­ய­ளித்­தி­ருந்த வங்­கி­கள் அந்­தக் கடன்­களை நிறு­வ­னங்­க­ளுக்­குக் கொடுப்­ப­தா­கத் தெரி­ய­வில்லை.

அவ்­வாறு இந்த அவ­சர காலத்­தில் நிறு­வ­னங்­க­ளுக்குக் கொடுக்­கப்­படும் நிதியை மீண்­டும் பெற­மு­டி­யாத நிலை ஏற்­ப­டக்­கூ­டும் என்­ப­தால் நிறு­வ­னங்­க­ளுக்கு வங்­கி­கள் கடன்­கொ­டுப்­ப­தில் இருந்து பின்­வாங்­கு­வ­தா­கத் தெரி­கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!