சீனாவின் பொருட்களை நம்பியிருக்கும் அமெரிக்கா

சீனாவின் பொருட்களை நம்பியிருக்கும் அமெரிக்கா

1 mins read

வாஷிங்­டன்: கொரோனா கிருமிப் பர­வலை சீனா கையாண்­ட­ விதத்தை அமெ­ரிக்கா அர­சி­யல்­வாதி­கள் குறை­கூ­றி­ வந்தனர்.

ஆனால் அந்த நிலைமை தற்­போது மாறி சீனா­வின் பொருட்­களை நம்­பி­யி­ருக்­கும் நிலை அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­பட்­டுள்­ளது.

கொரோனா கிருமி நெருக்­க­டிக்கு முன்பு சீனா தயா­ரித்த முகக்­க­வ­சங்­களில் ஏறக்­கு­றைய பாதி அமெ­ரிக்­கா­வுக்கு ஏற்­று­மதி செய்­யப்­பட்­டன.

இது, வழக்­க­மாக தேவைப்­படும் அள­வா­கும். தற்­போது அமெ­ரிக்­கா­வின் பேரங்­கா­டி­க­ளி­லும் கடை ­க­ளி­லும் முகக்­க­வ­சங்­கள் தீர்ந்­து­விட்­டதால் தேவை மேலும் அதி கரித்துள்ளது.

சீனா­வின் வூஹான் நக­ரில் உரு­வான கிருமி உலக முழு­வ­தும் பரவி ஒரு மில்­லி­ய­னுக்­கும் மேற்­பட்­டோரை பாதித்­துள்­ளது. ஆனால் அதே வூஹான் நக­ரம்­தான் முகக் கவ­சம் போன்ற பாது­காப்புப் பொருட்­களை தயா­ரித்து உல­க நாடுகளின் தேவையை பூர்த்தி செய்துவந்தது.

அமெ­ரிக்­கா­வுக்கு மட்­டு­மல்­லா­மல் உலக நாடு­க­ளுக்­கும் சீனா­தான் இத்­த­கைய பொருட்­களை பெரு­ம­ள­வில் தயா­ரித்து விநி­யோ­கித்­துள்­ளது என்று அனைத்­து­லக பீட்­டர்­சன் பொரு­ளி­யல் கழ­கத்­தின் ஆய்­வா­ளர் சாட் போவ்ன் குறிப்­பிட்­டார்.

இத­னால் சீனா­வுக்கு சந்­தை­யைத் திறந்­து­வி­டா­மல் அங்கிருந்து பொருட்­களை வாங்க விரும்­பா விட்டால் உங்­க­ளுக்கு நம்­பிக்­கையே ஏற்படாது என்று அவர் கூறினார்.