2வது முறையாக சோதனை; டிரம்ப்புக்கு கிருமியில்லை

1 mins read
0f3276dc-1cec-4966-9660-42686b5a3be7
தற்போது பின்பற்றப்படும் கைகுலுக்குவதைத் தவிர்ப்பது போன்ற நடைமுறைகளை நீண்ட காலத்துக்கு கடைப்பிடிக்கப்பட வேண்டியதாக இருக்கும். படம்: ஏஎஃப்பி -

வாஷிங்­டன்: அதி­பர் டிரம்ப் தமக்கு கிருமி தொற்று இருக்­கி­றதா என்று மீண்­டும் சோதித்­துக் கொண்­டார்.

அந்தச் சோதனையில் அவ­ருக்கு கிருமி தொற்­று இல்லை என்பது தெரிய வந்­தது.

சுமார் 15 நிமி­டங்­களில் கிருமி தொற்­றைக் கண்­டு­பி­டிக்­கும் புதிய சாத­னம் மூலம் அவ­ருக்கு பரி­சோ­தனை நடத்­தப்­பட்­டது.

"புதிய சாத­னம் எப்­படி வேலை செய்­கிறது என்ற ஆர்­வத்­தில் மீண்­டும் பரி­சோ­தனை செய்து கொண்­டேன்," என்று திரு டிரம்ப் சொன்­னார்.

கடந்த மாதம் அவர் பரி­சோ­தனை செய்து கொண்­ட­போ­தும் அவ­ருக்கு கிருமி தொற்று இல்லை என்­பது கண்­டு­பி­டிக்­கப்­பட்­டது.