பெருகும் நோயாளிகளால் திணறும் நியூயார்க் நகரம்

பெருகும் நோயாளிகளால் திணறும் நியூயார்க் நகரம்

1 mins read

நியூ­யார்க்: நியூ­யார்க்­கில் கிருமி தொற்­றால் பாதிக்­கப்­பட்­ட­வர்­ களின் எண்­ணிக்கை கொத்து கொத்தாக அதி­க­ரித்து வரு­வ­தால் மருத்­து­வ­ம­னை­யில் படுக்­கை­களுக்கு தட்­டுப்­பாடு ஏற்­பட்­டுள்­ளது.

இத­னால் ஜாவிட்ஸ் மாநாட்டு நிலை­யத்தைத் தற்­கா­லிக மருத்­து­வ­ ம­னை­யாக மாற்ற அதி­பர் டிரம்ப் திட்­ட­மிட்­டுள்­ள­தாக வெள்ளை மாளிகை பேச்­சா­ளர் ஒரு­வர் தெரி­வித்­தார்.

இந்த மருத்­து­வ­ம­னையை ராணு­வ­மும் மத்­திய அர­சும் இணைந்து நடத்­தும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.

அமெ­ரிக்­கா­வி­லேயே நியூ­யார்க் நக­ரில்­தான் அதி­க­மா­னோர் கிருமி­ யால் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். அமெ­ரிக்­கா­வின் கிருமி பர­வல் மைய­மா­க­வும் அது திகழ்­கிறது. அங்கு மட்­டும் நேற்று வரை 47,000 பேருக்கு மேல் கிருமி தொற்­றி­யி­ருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.