பிரிட்டனில் அவசர கதியில் திறந்தவெளி மருத்துவமனைகள்

லண்­டன்: கொரோனா கிரு­மித்­தொற்று சம்­ப­வங்­கள் அதி­ரிக்­கும் என எதிர்­பார்க்­கப்­படும் நிலை­யில் திறந்­த­வெளி மருத்­து­வ­ம­னை­களை பிரிட்­டன் அவ­சர அவ­ச­ர­மாக எழுப்பி வரு­கிறது.

இதன் தொடர்­பில் நாட்­டின் மேற்­குப் பகு­தி­யில் பிரிஸ்­டல் நக­ரில் ஒரு மருத்­து­வ­ம­னை­யும் வடக்கே ஹேரோ­கேட் பகு­தி­யில் ஒரு மருத்து­ வம­னை­யும் எழுப்­பப்­ப­ட­வுள்­ள­தாக அறி­விக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

பிரிட்­டிஷ் தலை­ந­கர் லண்­ட­னில் 4,000 படுக்­கை­கள் கொண்ட வசதி ­யு­டன் 10 நாட்­க­ளுக்­குள் கட்­டப்­பட்­டுள்ள மருத்­து­வ­மனை நேற்று திறந்து வைக்­கப்­பட்­டுள்ள நிலை­யி­லும், முதல்­நிலை மருத்­துவ ஊழி­யர்­க­ளுக்கு கொரோனா கிரு­மித்­தொற்று இருக்­கி­றதா என்று பிரிட்­டிஷ் அரசு சோதித்­துப் பார்க்க தவ­றி­யது விமர்­ச­னங்­க­ளுக்கு வழி­விட்ட நிலை­யி­லும் பிரிஸ்­ட­லி­லும் ஹேரோ­கேட்­டி­லும் திறந்­த­வெளி மருத்­து­வ­ம­னை­கள் அமை­வது தொடர்­பான அறி­விப்பு வெளி­வந்து­உள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

அத்­து­டன், ஏறக்­கு­றைய 3,000 படுக்கை வச­தி­கள் கொண்ட இது­போன்ற மேலும் இரண்டு மருத்­து­வ ­ம­னை­கள் பர்­மிங்­ஹம், மான்­செஸ்­டர் ஆகிய நக­ரங்­க­ளி­லும் அமை­ய­வுள்­ள­தாக பிரிட்­ட­னின் தேசிய சுகா­தார பரா­ம­ரிப்புச் சேவை தனது அறிக்­கை­யில் தெரி­வித்­துள்­ளது.

இந்­நி­லை­யில், பிரிட்­ட­னில் கடந்த புதன்­கி­ழ­மை­யன்று ஆக அதிக எண்­ணிக்­கை­யாக ஒரு நாளில் 569 பேர் இந்­தக் கொடிய நோய்க்கு பலி­யா­கி­யுள்­ள­னர்.

இதற்கு முந்­திய நாளில் 563 பேர் இறந்­துள்­ளது குறிப்­பி­டத்­தக்­கது.

இந்­தப் பிரச்­சி­னை­யில் பிரிட்­டிஷ் அரசு மென்­மை­யாக எடுத்­துக் ெகாண்­டுள்­ள­தாக எழுந்த குறை­கூ­றல்­களை அடுத்து இனி கொரோனா கிரு­மித்ெ­தாற்று இருக்­கி­றதா என்று கண்­ட­றி­யும் சோதனை பெரு­ம­ள­வில் அதி­க­ரிக்­கப்­படும் என்று பிரிட்­டிஷ் பிர­த­மர் போரிஸ் ஜான்­சன் தெரி­வித்­துள்­ள­தாக ஏஎ­ஃப்பி செய்­தித் தக­வல் கூறு­கிறது.

திரு ஜான்­சன் தமக்கு இந்­தக் கிரு­மித்­தொற்று கண்­டி­ருப்­ப­தா­கக் கூறி அவ­ரு­டைய அதி­கா­ர­பூர்வ இல்­லத்­தில் கடந்த மார்ச் மாதம் 27ஆம் தேதி­யி­லி­ருந்து தம்மை தனி­மைப்­ப­டுத்­திக்­கொண்­டு உள்­ளார்.

இதே­போல், இந்­தக் கிரு­மித்­தொற்று கண்­டுள்ள இள­வ­ர­சர் சார்ல்ஸ் வியா­ழக்­கி­ழ­மை­யன்று தனி­மைப்­ப­டுத்­தப்­பட்ட நிலை­யில்­இருந்து வெளி­வந்­தார்.

அதன்­பின்­னர் செய்தி நிறு­வ­னம் ஒன்­றுக்கு பேட்­டி­ய­ளித்த பிரதமர் போரிஸ் ஜான்சன், தமது அனு­ப­வம், “அபூர்­வ­மா­னது, விரக்­தி­ய­ளிப்­ப­தாக இருந்­தது, பல சம­யங்­களில் வேத­னை­ய­ளித்­தது,” என்று கூறி­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!