ஸ்பெயினில் 124,736 பேருக்குப் பாதிப்பு

மட்ரிட்: கொரோனா கிருமித்தொற்றால் ஸ்பெயினில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 124, 736க்கு அதிகரித்துள்ளது.

இத்தாலியில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையைவிட இது அதிகம்.

இத்தாலியில் 119,827 பேருக்குக் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயினில் கிருமித்தொற்றின் காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் 809 பேர் உயிரிழந்தனர்.

கடந்த இரண்டு நாட்களாக கிருமித்தொற்று காரணமாக ஸ்பெயினில் இறந்தோர் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இதனால் அந்நாட்டில் கிருமித்தொற்று காரணமாக மரணம் அடைவோர் எண்ணிக்கை இனி குறையும் என்ற சிறு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

ஸ்பெயினில் கிருமிப் பரவலைக் குறைக்க முடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக ஸ்பானிய சுகாதார அமைச்சர் செல்வடோர் ஐல்லா தெரிவித்தார். ஸ்பெயினில் முடக்கநிலை இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படக்கூடும்.