அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

அமெரிக்கா அதிரடி நடவடிக்கை

1 mins read
ffb3e05e-fb05-4711-be74-529600334cec
நியூயார்க்கின் எல்ம்ஹர்ஸ்ட் மருத்துவமனையில் கொரோனோ தொற்றுக்கான சோதனை செய்துகொள்ள காத்திருக்கும் மக்கள். படம்: ராய்ட்டர்ஸ் -

வாஷிங்­டன்: அமெ­ரிக்­கா­வில் கொரோனா கிரு­மித்­தொற்று மோச­மாக பர­வு­கிறது. நாள்­தோ­றும் மர­ணங்­களும் பாதிப்­பு­களும் கிடு­கி­டு­வென கூடி வரு­கின்­றன. முகக்­க­வ­சங்­கள், செயற்கை சுவா­சக்­க­ரு­வி­கள் போன்ற பல­வும் அமெ­ரிக்­கா­வுக்கு அவ­ச­ர­மாக அதிக அள­வில் தேவைப்­ப­டு­கின்­றன.

இந்த நிலை­யில், அமெ­ரிக்­கா­வின் பிர­ப­ல­மான 3M நிறு­வ­னம், வெளி­நா­டு­களில் தயா­ரிக்­கும் முகக்­க­வ­சங்­களை வெளி­நா­டு­க­ளுக்கு விற்­கக்­கூ­டாது என்­றும் அந்த நிறு­வ­னம் அப்­ப­டிச் செய்­வதை உடனே தடுக்­க­வேண்­டும் என்­றும் அமெ­ரிக்க அதி­ப­ருக்கு நெருக்­கடி அதி­க­மாகி வரு­கிறது.

அமெ­ரிக்­கா­வின் மின்­னி­சோட்டா மாநி­லத்­தைச் சேர்ந்த 3M என்ற நிறு­வ­னம் உலக நாடு­களில் பல­வற்­றி­லும் செயல்­ப­டு­கிறது. மருத்­துவ, சுகா­தா­ரத் துறை பொருட்­களை அது தயா­ரிக்­கிறது. அந்த நிறு­வ­னம் பிற நாடு­களில் தயா­ரிக்­கும் முகக்­க­வ­சங்­களை அமெ­ரிக்­கா­வுக்கு அனுப்­பி­வைத்­து­விட வேண்­டும் என்று அமெ­ரிக்க அதி­பர் டோனல்ட் டிரம்ப் விரும்­பு­கி­றார்.

இதற்­காக கொரியா போர்க்­கா­லத்­தில் அம­லில் இருந்த ஒரு சட்­டத்தை அமெ­ரிக்க நிர்­வா­கம் பயன்­ப­டுத்தி வரு­கிறது.

'தற்­காப்பு தயா­ரிப்­புச் சட்­டம்' என்ற கொரி­யப் போர்க்­கால சட்­டம், ஓர் அமெ­ரிக்க நிறு­வ­னம் அமெ­ரிக்­கா­வுக்­குத்­தான் முன்­னு­ரிமை அளிக்க வேண்­டும் என்று வலி­யு­றுத்­து­கிறது. அந்­தச் சட்­டத்­தைப் பயன்­ப­டுத்த அதி­பர் விரும்­ப­வில்லை என்­றா­லும் இந்த விவ­கா­ரத்­தைப் பொறுத்­த­வ­ரை­யில், வெளி­நா­டு­களில் தான் தயா­ரிக்­கும் முகக்­ க­வ­சங்­களை 3M நிறுவனம் அமெ­ரிக்­கா­வுக்கு அனுப்­பி­விட வேண்­டும் என்­ப­தைக் கட்­டா­ய­மாக்­கும் நோக்­கத்­தில் அந்­தச் சட்­டத்தை அமெ­ரிக்க நிர்­வா­கம் கையில் எடுத்­துள்­ளது. அமெ­ரிக்­கா­வில் 3M தயா­ரிக்­கும் முகக்­க­வ­சங்­களை ஏற்­று­மதி செய்­ய­வும் தடை விதிக்­கப்­படும்.