தாய்லாந்தில் புதிதாக 102 கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

தாய்லாந்தில் 102 புதிய கொரோனா கிருமித்தொற்றுச் சம்பவங்களும் மேலும் மூன்று மரணங்களும் பதிவாகியுள்ளதாக அந்நாட்டின் பொதுச் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அந்நாட்டின் மொத்த சம்பவங்களின் எண்ணிக்கை 2,169க்கு உயர்ந்துள்ளது. அத்துடன் அங்கு இதுவரை இந்நோயால் 23 பேர் பலியாகியுள்ளனர்.

சனிக்கிழமையன்று (மே 4ஆம் தேதி) தாய்லாந்து விமானச் சேவைகள் வருவதை மூன்று நாட்களுக்குத்  தடை செய்தது. பேங்காக்கின் சுவர்ணபூமி விமான நிலையத்தில்  கடந்த வெள்ளிக்கிழமை  தரையிறங்கிய 152 தாய்லாந்து குடிமக்கள், தனிமைப்படுத்தப்பட மறுத்ததால் விமான நிலையத்தில் அமளி ஏற்பட்டது.

தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஊரடங்கு தொடங்கிய பின்னர் இந்தத் தடை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.