சீனா: புதிதாக கொரோனா கிருமி தொற்றியோர் அதிகரிப்பு

பெய்ஜிங்: சீனாவில் சனிக்கிழமை புதிதாக    30 பேருக்கு கொரோனா கிருமி தொற்றியது. வெள்ளிக்கிழமை அளவைவிட இது 19 அதிகம் என்று தெரிவிக்கப்பட்டது. சனிக்கிழமை பாதிக்கப்பட்டவர்களில் வெளிநாட்டில் இருந்து வந்தவர்களும் உள்ளூரிலேயே கிருமி தொற்றியவர்களும், வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அதிகம் என்பது தெரியவந்தது. 

சீனப் பெருநிலத்தில் மொத்தம் 81,669 பேரை  கொரோனா கிருமி தொற்றி உள்ளது. மரண     எண்ணிக்கை 3,329 ஆக இருக்கிறது. 

சீனாவில் நிலவரம் படிப்படியாக மேம்பட்டு வருகிறது என்றாலும் கொரோனாவைத் துடைத்து ஒழிக்க அந்த நாடு எவ்வளவுதான் கடுமையாகப் பாடுபட்டாலும் அந்தக் கிருமி இன்னமும் ஒழிவதாகத் தெரியவில்லை.