ஆஸ்திரேலியா: பாதிப்பு விகிதம் குறைகிறது; நம்பிக்கை கூடுகிறது

ஆஸ்திரேலியா: பாதிப்பு விகிதம் குறைகிறது; நம்பிக்கை கூடுகிறது

1 mins read
bd1db1a2-5245-4a26-bc0c-23e18e398ddf
கொரோனா கிருமித்தொற்று இருந்த ரூபி பிரின்சஸ் என்ற உல்லாசக் கப்பல் சிட்னி துறைமுகத்தில் இருந்து செல்கிறது. சென்ற மாதம் வந்த இக்கப்பலில் இருந்த ஆயிரக்கணக்கான பயணிகள் தரை இறங்கிச் செல்ல அனுமதிக்கப்பட்டது பற்றி ஆஸ்திரேலிய போலிசார் புலன்விசாரணையைத் தொடங்கி இருக்கிறார்கள். அந்தப் பயணிகளில் 10 பேர் பிறகு இறந்துவிட்டனர். படம்: இபிஏ -

மெல்­பர்ன்: ஆஸ்­தி­ரே­லி­யா­வில் கொரோனா கிருமி வேகம் குறைந்து­ வ­ரு­கிறது என்று அந்த நாட்­டின் சுகா­தார அதி­கா­ரி­கள் பல­ரும் நம்பத்­ தொ­டங்கி இருக்­கி­றார்­கள். இருந்­தா­லும் தொடர்ந்து விழிப்பு நிலை அவ­சி­யம் என்று அவர்­கள் வலி­யு­றுத்தி உள்­ள­னர்.

ஒரு மீட்­டர் இடை­வெளி விதி­யைத் தொடர்ந்து பல மாதங்­க­ளுக்­குக் கடைப்­பி­டித்­து­வ­ர­வேண்­டும் என அவர்­கள் தெரி­வித்­த­னர்.

ஆஸ்­தி­ரே­லி­யா­வில் ஞாயிற்­றுக்­கி­ழமை காலை நேரத்­துக்கு முந்தைய 24 மணி நேரத்­தில் புதி­தாக கொரோனா கிரு­மித் தொற்­றி­ய­வர்­கள் எண்­ணிக்கை 181 ஆக இருந்­தது.

அவர்­க­ளை­யும் சேர்த்து மொத்­தம் 5,635 பேர் பாதிக்­கப்­பட்­ட­னர். 34 பேர் மர­ணம் அடைந்­துள்­ள­னர்.

அன்­றா­டம் கிரு­மித்­தொற்­றுக்கு ஆளா­வோ­ரின் விகி­தாச்­சா­ரம் 5 விழுக்­காட்­டுக்குக் குறை­வாக இருக்­கிறது. கடந்த மார்ச் மாத நடுப்­பகு­தி­யில் நில­விய அள­வு­டன் ஒப்­பி­டு­கை­யில் இப்­போது புதி­தாக கிரு­மித்­தொற்­று­வோ­ரின் எண்ணிக்கை ஐந்­தில் ஒரு பங்குக் கூட இல்லை.

இந்­நி­லை­யில் கருத்து கூறிய நியூ சவுத் வேல்ஸ் சுகா­தார பாது­காப்­புத் துறை இயக்­கு­நர் ஜெரோமி மெக்­அ­னுல்டி, இந்த நில­வ­ரம் நம்­பிக்கை அளிப்­ப­தா­கக் கூறி­னார்.

இருந்­தா­லும் அடுத்த ஆறு மாத காலத்­திற்கு ஆஸ்­தி­ரே­லிய மக்­கள் ஒரு மீட்­டர் இடை­வெளி நியதி­யைக் கடைப்­பி­டிக்க வேண்டி இருக்­கும் என்று சுகா­தார அமைச்­சர் ஹண்ட் கருத்து கூறி­னார்.

அடுத்த ஆறு மாத காலம் நமக்­குச் சிர­ம­மா­கத்­தான் இருக்­கும். அதைச் சமா­ளித்­து­தான் ஆக வேண்­டும் என்­றார் அவர்.