வீட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகள்; கணக்கில் வராத உயிரிழப்புகள்

வீட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகள்; கணக்கில் வராத உயிரிழப்புகள்

1 mins read
2be0f6f0-bb4e-435b-9582-549ac51c2c1a
இத்­தா­லி­யில் கிரு­மித் தொற்­றால் மருத்­து­வ­ம­னை­களில் இறப்­ப­வர்­கள் மட்­டு­மல்­லா­மல் வீடு­க­ளி­லேயே சிகிச்சை பெற்று அது பல­ன­ளிக்­கா­மல் இறப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் கணி­ச­மான அள­வில் உள்­ள­தாக அண்­மைய ஆய்வு ஒன்று கூறு­கிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

மிலன்: இத்­தா­லி­யில் கிரு­மித் தொற்­றால் மருத்­து­வ­ம­னை­களில் இறப்­ப­வர்­கள் மட்­டு­மல்­லா­மல் வீடு­க­ளி­லேயே சிகிச்சை பெற்று அது பல­ன­ளிக்­கா­மல் இறப்­ப­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யும் கணி­ச­மான அள­வில் உள்­ள­தாக அண்­மைய ஆய்வு ஒன்று கூறு­கிறது.

இத்­தா­லி­யின் பெர்­காமோ மாகா­ணத்­தில் மட்­டும் மருத்­து­வ­ம­னை­யில் மாண்­ட­வர்­க­ளின் எண்­ணிக்கை 2,060. ஆனால் வீட்­டில் சிகிச்சை பெற்று இறந்­த­வர்­க­ளின் எண்­ணிக்­கை­யை­யும் சேர்த்­தால் அது இரு மடங்­கா­கும் என்­கிறது ஆய்வு.

அறி­கு­றி­கள் கண்­ட­றி­யப்­ப­டா­ம­லும் சிகிச்­சைக்­கான தொலை­பேசி ஆலோ­ச­னை­கள் போதாத நிலை­யி­லும் நிறைய பேர் வீட்­டி­லேயே இறந்­து­வி­டு­வ­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

வீட்­டி­லுள்­ள­வர்­க­ளுக்கு உட­னடி மருத்­துவ உதவி கிடைத்­தால் பல மர­ணங்­கள் தவிர்க்­கப்­ப­ட­லாம் என்றார் அப்பகுதியில் உள்ளவர்களுக்கு வீட்டிற்குச் சென்று சிகிச்சை அளிக்கும் மருத்துவர் ஒருவர்.

மேலும் மருத்­து­வர்­கள் தொற்­று­நோ­யி­லி­ருந்து தங்­க­ளைக் காப்­பாற்­றிக் கொள்ள போது­மான முகக்கவசங்கள் மற்­றும் உபகரணங்கள் இல்லாததால் வீட்டிற்குச் சென்று சிகிச்சையளிப்பதைத் தவிர்ப்பதாகவும் அவர் சொன்னார்.

ஜெர்மனி: 90,000 பேர் தொற்றால் பாதிப்பு

ஜெர்­ம­னி­யில் தொற்று பாதித்­த­வர்­க­ளின் எண்­ணிக்கை 90,000ஐ கடந்­துள்­ளது. இது­வரை 1,444 பேர் பலி­யாகி­னர். 26,000க்கும் அதி­க­மா­ன­வர்­கள் குண­ம­டைந்­துள்­ள­னர். மேலும் அந்­நாட்­டைச் சேர்ந்த இளம் மருத்­து­வர்­கள் பல்­வேறு நாடு­க­ளி­லி­ருந்து தாய் நாடு திரும்பி சிகிச்சை அளித்து வரு­வ­தாகக் கூறப்படுகிறது.