கொரோனா: ஈரான், துபாயில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் அதிகரிப்பு

கொரோனா: ஈரான், துபாயில் கட்டுப்பாடு நடவடிக்கைகள் அதிகரிப்பு

1 mins read
3ab9a331-6881-4a2a-86d1-4e181a211306
மெட்ரோ ரயில், டிராம் சேவைகள் மறு அறிவிப்பு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் பலியாகினர். படம்: ராய்ட்டர்ஸ் -

துபாய்: கடுமையாக்கப்படும் கட்டுப்பாடுகள்

துபாய்: கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக துபாயில் நேற்று கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேலும் கடுமையாக்கப்பட்டுள்ளன. அதன்படி அத்தியாவசிய பொருட் களை வாங்குவதற்கு ஒரு வீட்டிற்கு ஒருவர் மட்டுமே வெளியில் வரவேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் அனைத்து மெட்ரோ ரயில், டிராம் சேவைகள் மறு அறிவிப்பு வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அங்கு இதுவரை 1,500 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 பேர் பலியாகினர்.

சில நடவடிக்கைகளுக்கு அனுமதி

துபாய்: கிருமித் தொற்றால் மிகமோசமாக பாதிக்கப்பட்டுள்ள மத்திய கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் வரும் 11ஆம் தேதி முதல் 'ஆபத்து குறைவான' பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் தொடங்கவுள்ளதாக ஈரான் அதிபர் ஹசன் ருஹானி தெரிவித்துள்ளார். கிருமிப் பரவலைத் தடுக்கும் வகையில் மக்களின் இயல்பு வாழ்க்கையை முடக்குவது ஏற்கெனவே பொருளாதாரத் தடை யால் பாதிக்கப்பட்டுள்ள நாட்டின் பொருளாதாரத்தை அழித்து விடக்கூடும் என்ற நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டு உள்ளது. ஆனால், பள்ளிகள், சமூக நடவடிக்கைகளுக்கான தடை 18ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.