கிருமிப்பரவலுக்கு மத்தியில் பெண்களைப் பாதுகாக்க வேண்டுகோள்

கிருமிப்பரவலுக்கு மத்தியில் பெண்களைப் பாதுகாக்க வேண்டுகோள்

1 mins read
b285ec68-1b69-4fcc-804e-b950a63e74cd
-

ஐக்கிய நாடுகள் அமைப்பின் தலைவர் அண்டோனியோ குவெட்டரெஸ், கொரோனா கிருமித்தொற்று சமயத்தில் அரசாங்கங்களைக் கட்டிக்காக்க கேட்டுக்கொண்டிருக்கிறார்.

"வன்முறை போர்க்களத்திற்குள் மட்டும் உட்பட்டதல்ல. பெண்களுக்கு ஆக அதிக பாதுகாப்பு பெறவேண்டிய இல்லங்களில் அவர்கள் அதிக மிரட்டலை எதிர்நோக்குகின்றனர்" என்று அவர் நேற்று தமது அறிக்கையில் கூறினார். கொரோனா கிருமிப்பரவலால் பயமும் நெருக்கடியும் அதிகரித்ததுடன் பெண்களுக்கு எதிரான வன்முறைச் சம்பவங்களும் கூடியுள்ளதாக அவர் சுட்டினார்.

"நாம் ஒன்றிணைந்து கொரோனா கிருமியை ஒழிக்க பாடுபடுவது போல வீட்டில் ஏற்படும் வன்முறைகளைத் தடுக்க முற்படுவோம்," என்றும் அவர் சொன்னார்.